வெள்ளி, 27 ஜனவரி, 2012

கொதிக்கும் தமன்னா இரண்டாவதா? முடியாது!

“இரண்டாவது நடிகையாக நடிக்கும் அளவிற்கு என் மார்கெட் ஒன்றும் சரிந்துவிடவில்லை( தமன்னா இப்போது தெலுங்கில் பிஸியாம்!). எனக்கு அந்த நிலை வராது என்று உங்கள் இயக்குனரிடம் மறக்காமல் சொல்லுங்கள்” 

வாமனன் பட இயக்குனர் அகமது இயக்கத்தில் நடிகர் ஜீவாவும், த்ரிஷாவும் முதல் முறையாக இணைகிறார்கள். பெயர் சூட்டப்படாத இந்தப்படத்தில் ஜீவாவுக்கு இரண்டு ஜோடியாம்.
 முதல் நடிகையாக த்ரிஷா நடிப்பதால் இரண்டாவது நடிகையாகவும் ஒரு முன்னணி நடிகையை பேசிவிட்டால் படத்தின் விளம்பரம் சூடுபிடிக்குமே என எண்ணி, உஷாராக தன் மேனேஜரை நடிகை தமன்னாவிடம் அனுப்பியுள்ளார் இயக்குனர்.
 கதையை பற்றி கேட பின் தமன்னா குழப்பத்துடன் ”முதல் நடிகையாக த்ரிஷாவை புக் செய்துவிட்டதாக சொன்னீர்கள். த்ரிஷாவிற்கு பதில் நான் நடிக்க வேண்டுமா? அல்லது த்ரிஷாவுடன் இணைந்து நான் நடிக்க வேண்டுமா?” என்று சூடான குரலில் கேட்டிருக்கிறார்.
 மேனேஜரோ இருவரும் தான் என்ற உண்மையைக் கூற, வெள்ளை முகம் சிவப்பாக “இரண்டாவது நடிகையாக நடிக்கும் அளவிற்கு என் மார்கெட் ஒன்றும் சரிந்துவிடவில்லை( தமன்னா இப்போது தெலுங்கில் பிஸியாம்!). எனக்கு அந்த நிலை வராது என்று உங்கள் இயக்குனரிடம் மறக்காமல் சொல்லுங்கள்” என்று மேனேஜரை விரட்டியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக