புதன், 4 ஜனவரி, 2012

சென்னை நகரில் பிளாஸ்டிக் தார்சாலை திட்டம்


சென்னை தியாகராயநகரில் ஜி.என்.செட்டி சாலை பகுதியில் உள்ள லட்சுமணன் சாலையில் பிளாஸ்டிக் கலந்த தார்சாலை அமைக்கும் பணியை சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி இன்று துவக்கி வைத்தார்.
மதுரை தியாகராஜ கல்லூரி முதல்வர் வாசுதேவன் இந்த சாலைக்கான செயல் விளக்கம் அளித்தார். மாநகராட்சி ஆணையர் தேவிதார் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மேயர் சைதை துரைசாமி பேசுகையில்,
சாலைகள் உறுதியுடன் விளங்க பிளாஸ்டிக் கலந்த தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 9 டன் தாருடன் ஒரு டன் பிளாஸ்டிக் கலந்து இந்த தார்சாலை அமைக்கப்படுகிறது. இது உறுதியுடனும் தரமாகவும் இருக்கும். சென்னை நகரில் நாளொன்றுக்கு 160 டன் பிளாஸ்டிக் குப்பை கிடைக்கிறது.
அதைக் கொண்டு தார்சாலைகள் மேலும் பல இடங்களில் போட முடியும். இந்த சாலைகள் போடும் பணியை ஒப்பந்தக்காரர்கள் பொறுப்புடன் நிறைவேற்றவேண்டும். மாநகராட்சி பொறியாளர்கள் இதனை கண்காணிக்க வேண்டும். சென்னை நகரில் எங்கும் குப்பை, சேதமடைந்த சாலைகள் என்று மக்கள் கவலைப்படுகிறார்கள். இந்த நிலை மாற்றி அமைக்கப்படும். வீடு வீடாக குப்பை சேகரிக்கும் பணி கொண்டு வரப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக