திங்கள், 23 ஜனவரி, 2012

சசிகலாவின் தம்பி திவாகரனை காணவில்லை

சசிகலாவன் தம்பி திவாகரன் மீது கொலை மிரட்டல் புகார் வந்துள்ளதைத் தொடர்ந்து போலீஸார் அவரை விசாரிக்கவும், கைது செய்யவும் தேடுதலில் இறங்கியுள்ளனர். இதையடுத்து திவாகரன் தலைமறைவாகி விட்டார்.
திவாகரன் மீது ரிஷியூரைச் சேர்ந்த கஸ்தூரி என்பவர் கொலை மிரட்டல் புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக திருவாரூர் போலீசில் புகார் அளித்த கஸ்தூரி, கடந்த ஆண்டு நவம்பர் 28ந் தேதி, அரசு வழங்கிய தொகுப்பு வீட்டை திவாகரன் இடித்து தரைமட்டம் ஆக்கி விட்டதாகவும், நிலத்தை சுற்றி வேலி அமைத்து தங்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்து வருவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை, திவாகரன் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மன்னார்குடியில் திவாகரனின் வீட்டை நூற்றுக்கணக்கான போலீசார் முற்றுகையிட்டுள்ளனர். இதனால் சுந்தரக்கோட்டையிலுள்ள தன்னுடைய பங்காள வீட்டில் திவாகரன் இல்லை. அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

அவரைக் கைது செய்யவும், விசாரணை நடத்தவும் தற்போது போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

அதிமுகவிலிருந்து சசிகலா வெளியேற்றப்பட்ட பின்னர் சசி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் போலீஸ் வலையில் சிக்கியுள்ளதைத் தொடர்ந்து புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திவாகரன் கைது செய்யப்படுவாரா என்ற பெரும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அவரை வைத்து மேலும் எத்தனை பேர் வளைக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

தமிழின உணர்வையும், செம்மொழியான தமிழ் மொழியையும் எவராலும் வீழ்த்த முடியாது என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக