புதன், 25 ஜனவரி, 2012

சல்மான் ருஷ்டி விவகாரம் ஸ்ரேயா ஆவேசம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த இலக்கிய விழாவில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி பங்கேற்க எதிர்ப்பு கிளம்பின. கொலை மிரட்டல் இருப்பதாகவும் கூறப்பட்டது. இதன் மூலம் சல்மான் ருஷ்டி இந்தியாவுக்கு வரவிடாமல் தடுக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.
சல்மான் ருஷ்டி எழுதிய நாவல் `மிட்நைட் சில்ரன்' என்ற பெயரில் படமாகிறது. தீபா மேத்தா இயக்குகிறார். இதில் முக்கிய கேரக்டரில் நடிகை ஸ்ரேயா நடிக்கிறார். சல்மான் ருஷ்டி இந்தியா வருவதற்கு எதிர்ப்பு கிளம்பியதை ஸ்ரேயா கண்டித்துள்ளார்.
இது குறித்து அவர்,சல்மான் ருஷ்டியை இலக்கிய விழாவில் பங்கேற்க விடாமல் விலக்கி வைத்தது முறையற்ற செயல்.
`இந்தியா போன்ற பெரிய ஜனநாயக நாட்டில் சல்மான் ருஷ்டி போன்ற ஆட்கள் வர முடியாமல் போவது துரதிர்ஷ்ட வசமானது.
ஒருவர் கருத்துக்கள் பிடிக்கவில்லை என்றால் அதற்கு பதில் கருத்துக்கள் சொல்லலாம்’’ என்று தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக