புதன், 4 ஜனவரி, 2012

புது அணை கட்டத் தேவையில்லை- நிபுணர் குழு

முல்லைப் பெரியாறு அணையை நவீனத் தொழில்நுட்பம் மூலம் பலப்படுத்தினால் போதும். புது அணை கட்ட வேண்டிய அவசியமே இல்லை என்று நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கேரள அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதையடுத்து சமீபத்தில் தொழில்நுட்ப நிபுணர்கள் சி.டி.தத்தே மற்றும் டி.கே. மேத்தா ஆகியோர் அடங்கிய குழு அணைக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வறிக்கையை நேற்று முன்தினம் அவர்கள் ஐவர் குழுவிடம் வழங்கினர். நேற்று இந்த ஆய்வறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.
ஐவர் குழுத் தலைவர் நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த்திடம் உறுப்பினர் தத்தே கூறுகையில், முல்லைப் பெரியாறு அணை பலமாகவே உள்ளது. அதில் நிலநடுக்கத்தால் எந்த வகையான பாதிப்பும் ஏற்படவில்லை.
தற்போதைய அணையை மேலும் பலப்படுத்தினால் போதுமானது.
அதற்கு நவீனத் தொழில்நுட்பங்கள் பல உள்ளன. அதைக் கடைப்பிடித்தால் போதும். உச்சநீதிமன்றம் கூறிய பலப்படுத்தும் பணிகளை தமிழக அரசு செய்ய வேண்டும்.

தற்போதைய நிலையில் புதிய அணை கட்டுவதற்கான தேவையும் இல்லை, அவசியமும் இல்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக