செவ்வாய், 24 ஜனவரி, 2012

கேரளா-தமிழகத்திலிருந்து போன கோழியை திருப்பி அனுப்பியது!

தேனியிலிருந்து அனுப்பப்பட்ட 10 டன் இறைச்சிக் கோழியை திருப்பி அனுப்பியுள்ளது கேரளா. கோழிகள் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி அனுப்பப்பட்டிருந்தாலும், வேண்டும் என்றேதான் இவ்வாறு கோழியை அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறு.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்துடன் மோதிக் கொண்டுள்ளது. தமிழர்களைத் தாக்குவது, தமிழர்களின் கடைகளைத் தாக்குவது, தமிழர்களின் வாகனங்களைத் தாக்குவது என அட்டகாசம் செய்து வருகின்றனர். இன்று வரை தாக்குதல்கள் நடந்து கொண்டுதான் உள்ளது.
இதற்கு தமிழகத்தில் பதிலடி கொடுக்கப்பட்டது. குறிப்பாக தேனி மாவட்ட மக்கள் மிகுந்த உறுதியுடன் தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேல் போராடினர். இதனால் தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு ஒரு பொருளும் போக முடியவில்லை.

இந்த நிலையில், தற்போது தேனி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு பொருள் போக்குவரத்து தொடங்கியுள்ளது. அதன்படி இடுக்கி மாவட்டத்திற்கு 10 டன் இறைச்சிக் கோழிகள் தேனியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை தற்போது கேரளா திருப்பி அனுப்பி விட்டது. கோழிகள் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டிருப்பதாக கேரள அதிகாரிகள் காரணம் கூறியுள்ளனராம். ஆனால் குறுகிய அரசியல் காரணங்களுக்காகவே கோழியை திருப்பி அனுப்பியுள்ளதாக கேரளாவிலேயே கூறுகிறார்கள்.

இதுகுறித்து தேனி மாவட்ட காலநடைத்துறை இணை இயக்குநர் சின்னத்துரை கூறுகையில், கோழிகள் அனைத்தும் ஆரோக்கியமாக இருந்தன. ஆனால் அரசியல் காரணங்களுக்காகவே அவற்றை திருப்பி அனுப்பியுள்ளனர். இங்கிருந்து அனுப்பப்பட்ட கோழிகளுக்கு சரியான தீவணம் வைக்காத காரணத்தால்தான் சில கோழிகள் உயிரிழந்துள்ளன என்றார்.

கால்நடைத்துறை உதவி இயக்குநர் சாமுவேல் துரைராஜ் கூறுகையில், இங்கிருந்து அனுப்பப்பட்ட கோழிகளை தமிழக, கேரள எல்லையில் டாக்டர்கள் பரிசோதித்து பின்னரே அனுப்பினர். ஆனால் அங்கு போன பின்னர் கோழிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறி திருப்பி அனுப்பியுள்ளனர். ஆனால் அங்குள்ள அரசியல் கட்சியினர்தான் கோழிகளைத் தடுத்து திருப்பி அனுப்பி விட்டனர் என்றார்.

கோழி வேண்டாம் என்றால் இனிமேல் அனுப்பாமல் நிறுத்த வேண்டியதுதான், வேறென்ன செய்வது...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக