புதன், 4 ஜனவரி, 2012

தனுஷ் - ஸ்ருதிஹாஸன் நெருக்கம் - கடும் கோபத்தில் ரஜினி குடும்பம்!!

Why this kalaivery?
 சூப்பர் ஸ்டாரை நிம்மதியாக இருக்கவிடமாட்டார்கள் போலிருக்கிறது சுற்றியிருப்பவர்கள்.
முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று இன்று வெளியாகியிருக்கும் செய்தி (வதந்தி அல்ல!) கோலிவுட்டில் மிகப்பெரிய சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது. அது தனுஷ் - ஸ்ருதி ஹாஸனின் நெருக்கம்!
3 படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ருதி ஹாஸனுடன் தனுஷ் மிக மிக நெருக்கமாகப் பழகுவதாகவும், அது பகிரங்கமாக ரஜினி குடும்பத்தில் பெரும் பிரச்சினையாக வெடித்திருப்பதாகவும் உறுதியாக செய்தி வெளியாகியுள்ளது.
தனுஷ் – ஸ்ருதி நெருக்கம் காரணமாக, சூப்பர் ஸ்டார் ரஜினி அமைதியிழந்து தவிப்பதாகவும், அவரும் அவரது மனைவி லதாவும் இதுகுறித்து தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவிடம் பேசியதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.
"ஐஸ்வர்யா நிலையை நினைத்தால் எங்களுக்கு கவலையாக உள்ளது. உடனடியாக உங்கள் மகனுடன் பேசுங்கள். நிலைமையை சரி செய்ய முடியுமா… அல்லது நாங்கள் வேறு வழியில் இதை டீல் பண்ணவா" என்று சற்று கோபத்துடனே ரஜினி தரப்பில் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மண்டபத்தில் தன்னைச் சந்திக்க வரும் நெருங்கிய நண்பர்களிடம் இந்த விவகாரத்தைச் சொல்லி வருத்தப்பட்டுள்ளார் ரஜினி. “எப்பேர்பட்ட மனிதர் அவர்… திருமணத்தின் போது தனுஷ் செய்த அத்தனை சில்லரைத்தனங்களையும் அவர் பொறுத்துக் கொண்டார். அதன் பிறகும் தனுஷ் திருந்தவில்லை. ஐஸ்வர்யா – தனுஷ் கொஞ்ச காலம் பிரிந்து இருந்ததும் நடந்தது. ஆனால் அனைத்தையும் பொறுத்துக் கொண்ட ரஜினியை மேலும் மேலும் டென்ஷனாக்குகிறார் தனுஷ்,” என்றார் ரஜினியை அடிக்கடி சந்திக்கும் அவரது நண்பர் ஒருவர்.

இந்தப் பிரச்சினையை விரைவில் சரி செய்வதாக கஸ்தூரி ராஜா உறுதியளித்துள்ளாராம்.

ஸ்ருதி ஹாஸன் ஏற்கெனவே மும்பையில் ஒருவரை காதலித்து, கொஞ்ச நாள் அவருடன் இருந்ததாகச் சொல்கிறார்கள். தெலுங்கு நடிகர் சித்தார்த்துடன் சில மாதங்கள் ஒன்றாக வாழ்ந்ததும் (கமல் ஆசியுடன்), பின்னர் அவரை விட்டுப் பிரிந்து வந்ததும் நினைவிருக்கலாம்.

சித்தார்த்தைப் பிரிந்த பிறகுதான் இந்த ‘3′ படத்தில் நடித்தார் ஸ்ருதி. அதுவும் ஏற்கெனவே ஒப்பந்தமான அமலா பாலை நீக்கிவிட்டு ஸ்ருதியை ஒப்பந்தம் செய்தார் ஐஸ்வர்யா. இப்போது அதுவே அவருக்கு எதிராக திரும்பியுள்ளது.

புத்தாண்டு தினத்தன்று மனைவி ஐஸ்வர்யாவின் பிறந்த நாளைக் கூட பொருட்படுத்தாமல், ஸ்ருதியுடன் ட்ரிங்ஸ் பார்ட்டிக்குப் போனாராம் தனுஷ். இதைக் கேள்விப்பட்டு பயங்கர மூட் அவுட் ஆகிவிட்டாராம் ரஜினி. தமன்னா, பூனம் பாஜ்வா என இளம் நாயகிகளின் தண்ணிப் பார்ட்டிகளில் தவறாமல் ஆஜராகிவிடுகிறார் தனுஷ். கொலவெறி பாட்டுக்கு கிடைத்த தாறுமாறான ஹிட்டும், மும்பையில் கிடைத்துள்ள புதிய சினேகிதங்களும் அவரை தலைகால் புரியாமல் ஆட வைப்பதாக ரஜினிக்கு நெருக்கமானவர்கள் கடுப்புடன் கூறுகின்றனர்.

யாரடி நீ மோகினி என்ற படத்தில் நடித்தபோது, நயன்தாராவுடன் ஏகத்துக்கும் நெருக்கமாகி, எல்லை மீறிப் போனதும், நயன்தாராவை கிண்டி நட்சத்திர ஓட்டலில் நிரந்தரமாகத் தங்க வைத்திருந்ததும் செய்தியாக ஏற்கெனவே வந்ததுதான். அப்போது ரஜினி தன் பாணியில் கண்டிக்க, தனுஷ் வாலைச் சுருட்டிக் கொண்டாராம். இப்போது மீண்டும் ஸ்ருதியுடன் லீலையை ஆரம்பித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்த செய்தி உண்மைதானா?அல்லது '3' படத்தின் பப்ளிசிட்டியின் ஒரு அங்கமா என்றும் இன்னொரு தரப்பினர் பேசிக் கொள்கிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக