வியாழன், 26 ஜனவரி, 2012

தமிழ் பட வேட்டையில் வித்யாபாலன்

பிரபல கவர்ச்சி நடிகை நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்த நடிகை வித்யாபாலன் தமிழ்ப்பட வேட்டையில் இறங்கியிருக்கிறாராம். சில்க் வாழ்க்கை வரலாறு, தி டர்ட்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் படமாக உருவானது. இப்படத்தில் நடிகை சில்க் கேரக்டரில் வித்யாபாலன் நடித்திருந்தார். வித்யா பாலனின் நடிப்பு பாலிவுட் ரசிகர்களை விட, கோலிவுட் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்து விட்டதாம்.

இதனால் தமிழ்ப்படங்களில் நடிக்க ஆசைப்படுகிறார் வித்யாபாலன். தனது ஆசையை நிறைவேற்றும் வகையில் தமிழ் இயக்குனர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் சிலருக்கு தகவல் சொல்லி அனுப்பியிருக்கிறாராம் வித்யா.
தமிழ் ரசிகர்கள் மத்தியில் கிடைத்திருக்கும் வரவேற்பால் அம்மணி, இந்த ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் தமிழ் சினிமாவுக்கு வரலாம் என்கிறது வித்யாவின் நட்பு வட்டாரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக