வியாழன், 5 ஜனவரி, 2012

புல் மப்பில்' விமானம் ஓட்ட வந்த பைலட்; 3 பணிப் பெண்களும் பிடிபட்டனர்

Kingfisher Flight Attendants

மும்பை: மும்பையில் புத்தாண்டு தினத்தன்று குடித்துவிட்டு விமானத்தை இயக்க வந்த கோ-பைலட்டும், 3 விமான பணிப் பெண்களும் கையும் களவுமாக பிடிபட்டனர். இதையடுத்து அவர்களை தாற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்துள்ளது மத்திய விமானப் போக்குவரத்துத்துறையின் டைரக்டர் ஜெனரல் அலுவலகம்.
குடித்துவிட்டு வந்த பைலட் இன்டிகோ விமான நிறுவனத்தைச் சேர்ந்தவர். 3 பணிப் பெண்களும் ஜெட்லைட், கிங்பிஷர், இன்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள்.

இவர்களை 3 மாதங்களுக்கு பணி நீக்கம் செய்துள்ள டைரக்டர் ஜெனரல் அலுவலகம் இவர்களது 'கடந்த கால வரலாற்றையும்' ஆய்வு செய்து வருகிறது. இதற்கு முன்பும் இவர்கள் பிடிபட்டிருந்தால், இவர்களது லைசென்ஸ் ரத்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக காலை 5 மணிக்கு விமானிகள், விமான சிப்பந்திகளை சோதனையிட வரும் டைரக்டர் ஜெனரல் அலுவலகக் குழுவினர் ஜனவரி 1ம் தேதி அந்த நேரத்துக்கு வரவில்லை. இதனால் சோதனைகள் ரத்தாகிவிட்டதாகக் கருதிய இந்த விமானியும் சிப்பந்திகளும் ஒரு ரவுண்டு அடித்துவிட்டு வந்தனர்.

இந் நிலையில் சில மணி நேரங்களுக்குப் பிறகு சோதனையைத் தொடங்கிய அதிகாரிகளிடம் இவர்கள் சிக்கிக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக