செவ்வாய், 3 ஜனவரி, 2012

சசிகலா நியமித்த 14 அமைச்சர்களின் பாதுகாப்பு அதிகாரிகள் மாற்றம்

முதல்வர் ஜெயலலிதா அதிரடியாய் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார்
தமிழக அமைச்சர்கள் அனைவரின்  பாதுகாப்பு அதிகாரிகளையும் (பி. எஸ். ஓ)  அதிரடியாக மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார் என்று தலைமைச்செயலக வட்டாரம் தெரிவிக்கிறது.

நிதி அமைச்சர் ஓ.பி. பன்னீர்செல்வம், கல்வி அமைச்சர் சி.வி.சண்முகம் உட்பட 14 அமைச்சர்களின் பி.எஸ். ஓக்களை மாற்றம் செய்துள்ளார். இந்த பி.எஸ்.ஓக்கள் அனைவரும் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாதுகாப்பு அதிகாரிகளை சசிகலா நியமித்தார் என்றும், அதனால் அவர்களை மாற்றம் செய்துள்ளார் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக