வெள்ளி, 16 டிசம்பர், 2011

தமிழகத்தில் மலையாள சினிமாக்களை வெளியிடுவதில் சிக்கல்


Malayalam Film
முல்லைப் பெரியாறு பிரச்சனையால், தமிழகத்தில் புதிய மலையாள சினிமாக்களை ரிலீஸ் செய்ய தியேட்டர் உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் அதிகளவில் மலையாளிகளும், கேரளாவில் தமிழர்களும் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இதனால் கேரளாவில் தமிழ் படங்களும், தமிழகத்தில் மலையாள படங்களும் திரையிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது முல்லைப் பெரியாறு பிரச்சனையால், தமிழகத்தில் மலையாள படங்களை திரையிட, தியேட்டர் உரிமையாளர்கள தயக்கம் காட்டி வருகின்றனர்.
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்த 'வெனீசிலே வியாபாரி', மோகன்லால் நடித்த 'அரேபியனும் ஒட்டகவும் பி.மாதவன் நாயரும்' உள்ளிட்ட மலையாள சினிமாக்கள் நாளை கேரளாவிலும், தமிழகத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டு இருந்தது. சென்னையில் 6 தியேட்டர்களிலும், கோவையில் 2 தியேட்டர்களிலும், திருப்பூரில் 1 தியோட்டரிலும் இந்த படங்கள் ரிலீஸ் செய்ய தீர்மானிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் தமிழகத்தில் தற்போது பதட்டமான சூழல் உள்ளதால் மலையாள சினிமாக்களை ரிலீஸ் செய்ய தியோட்டர் உரிமையாளர்கள் தயங்குகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் வெளிவந்த ஜெயராம் நடித்த 'சொப்பன சுந்தரி' என்ற மலையாள படம் மட்டுமே சென்னையில் உள்ள சில தியேட்டர்களில் ஓடி வருகிறது.

இது குறித்து தமிழகத்தில் மலையாள சினிமாக்களை திரையிடும் தியேட்டர் உரிமையாளர்கள் கூறியதாவது,

மலையாளிகளின் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மீது சில இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த நிலையில் மலையாள சினிமாக்களை திரையிட்டால், தியேட்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று பயப்படுகிறோம் என்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக