சனி, 24 டிசம்பர், 2011

காசோலைகளாக மட்டுமே நன்கொடை வசூலிக்கப்படும் : அன்னா ஹசாரே!


புதுடெல்லி: உண்ணாவிரதப் போராட்டச் செலவுகளுக்கு, காசோலைகள் மற்றும் வங்கி வரைவோலைகள் மூலமாக மட்டுமே, நன்கொடை வசூலிக்கப்படும் என அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். மத்திய அரசின் லோக்பாலுக்கு எதிராக, மும்பையில், வரும் 27ம் தேதி முதல் 3 நாட்கள் தாம் மேற்கொள்ளவுள்ள உண்ணாவிரதப் போராட்டச் செலவுகளுக்கு, காசோலைகள் மற்றும் வங்கி வரைவோலைகள் மூலமாக மட்டுமே, நன்கொடை வசூலிக்கப்படும் என அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, மும்பை எம்எம்ஆர்டிஏ., மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கான கட்டணத்தைக் குறைக்க, மும்பை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், சலுகை கோரி நீதிமன்றத்தை தனது ஆதரவாளர்கள் அணுகியது தவறு என்று ஹசாரே கூறியுள்ளார். மும்பை உண்ணாவிரதத்தில் தம்மு‌டன் கிரண்பேடியும் அர்விந்த் கெஜ்ரிவாலும் பங்கேற்பார்கள் என்றும், மற்றவர்கள் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக