ஞாயிறு, 18 டிசம்பர், 2011

காணவில்லை என கூறப்பட்ட வீணா மாலிக் மும்பையிலிருந்து ரகசியமாக பாக்.குக்கு ஓடினார்!

Veena Malik

மும்பை: காணாமல் போனதாக கூறப்பட்ட பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் மும்பையிலிருந்து ரகசியமாக பாகிஸ்தானுக்குப் போயுள்ளார்.
வாகா எல்லை வழியாக அவர் பாகிஸ்தானுக்குப் போனதாகவும், வாகா எல்லை வரை தனது காரில் வீணாவை, அவரது தோழர் அஷ்மித் படேல் கொண்டு வந்து விட்டதாகவும், பின்னர் எல்லைக்குள் புகுந்த வீணாவை, அவரது நட்பு வட்டாரத்தைச் சேர்ந்த சிலர் வந்து பிக்கப் செய்து கொண்டு போனதாகவும் செய்திகள் கூறுகின்றன.

முன்னதாக மும்பை வந்திருந்த வீணா மாலிக் அங்கு ஒரு படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருந்தார். ஆனால் திடீரென அவரைக் காணவில்லை. இதையடுத்து அவரது மேலாளர் பந்த்ரா காவல் நிலையத்தில் வீணாவைக் காணவில்லை என்று புகார் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்தில் எப்எச்எம் இதழுக்கு முழு நிர்வாண கோலத்தில் போஸ் கொடுத்திருந்தார் வீணா. மேலும் தனது தோள்பட்டையிலும் ஐஎஸ்ஐ என்ற முத்திரையைப் பதித்திருந்தார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஆனால் இது போலியான படம் என்று கூறிய வீணா, இதுதொடர்பாக நஷ்ட ஈடு கோரி எப்எச்எம் இதழுக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் இது உண்மையான படம்தான் என்று எப்எச்எம் கூறியது.

இந்த நிலையில்தான் வீணா மும்பை வந்து திடீரென மாயமாகி ரகசியமாக பாகிஸ்தானுக்குத் திரும்ப ஓடியுள்ளார். அவருக்கு மிரட்டல் ஏதும் வந்ததா, அதனால்தான் ரகசியமாக பாகிஸ்தானுக்குத் திரும்பி விட்டாரா என்பது குறித்துத் தகவல் ஏதும் இல்லை.

வீணா தற்போது லாகூரில் இருக்கிறாரா அல்லது வேறு எந்த நகரில் இருக்கிறார் என்பது தெரியவில்லை. விசாவைப் புதுப்பிப்பதற்காக அவர் பாகிஸ்தான் திரும்பியுள்ளதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.

45 நாள் விசாவில் இந்தியா வந்திருந்தார் வீணா. இது இன்னும் இரண்டு நாட்களில் முடிகிறது. இதனால்தான் அவர் பாகிஸ்தான் திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வீணா மாலிக்கின் ஒரிஜினல் பெயர் ஜாஹிதா. பாஸ்போர்ட்டில் இதுதான் உள்ளது. மேலும் அவர் புர்க்கா அணிந்தபடி வந்ததால் வாகா எல்லையில் அவரை யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக