வியாழன், 22 டிசம்பர், 2011

இங்கிருந்து கிளம்பிடு' என்று ஜெ. சசிகலாவிடம் சொல்லியிருக் கிறார். "நான் போகமாட்டேன்' என்று சசிகலா

பெங்களூரு சென்று திரும்பியபின் கெஸ்ட்ஹவுஸில் தங்கியிருந்த சசிகலா, போயஸ் கார்டனுக்குத் திரும்பியபிறகு, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (டிசம்பர் 18) அவரிடம் பேசினார் ஜெ. 4 மணி நேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தை முழுக்க முழுக்க விசாரணை பாணியிலேயே இருந் திருக்கிறது. நடராஜனுடன் சசிகலா பேசியது, பணப்பரிவர்த்தனை இவை பற்றித்தான் தொடர்ந்து கேள்விகள் கேட்டிருக்கிறார் ஜெ. அவர் வைத்த குற்றச்சாட்டு களை முற்றிலும் மறுத்திருக்கிறார் சசிகலா.
"நான் அவர்கிட்டே பேசலை. பண விஷயத்தில் எந்தத் தப்பும் பண்ணலை' என்று சசிகலா சொல்ல, ஜெ. எதுவும் பேசாமல் ஒரு டேப்பை ஆன் செய்திருக் கிறார். அதில் ஜெ. சுமத்திய குற்றச் சாட்டுகளுக்கான ஆதாரங்கள் சம்பந்தப்பட்டவர்களின் வாய்ஸி லேயே பதிவாகியிருந்தது. தன் னுடைய குரலை டேப்பில் கேட்ட சசிகலா எந்த பதிலும் சொல்ல வில்லை. ஜெ.வும் எதுவும் சொல் லாமல், "இங்கிருந்து கிளம்பிடு' என்று சசிகலாவிடம் சொல்லியிருக் கிறார். "நான் போகமாட்டேன்' என்று சசிகலா சொல்ல, ஜெ. தன் அறைக்குப் போய் படுத்துவிட்டார்.
திங்கள் (டிசம்பர் 19) அதிகாலை 4.30 மணி. போயஸ் கார்டனுக்குள் போலீஸ் ஃபோர்ஸ் நுழைந்தது. சசிகலாவால் வேலைக்கு சேர்க்கப்பட்ட எல்லோரையும், கிளம் புங்க என்று சொல்லி துணி மணிகளோடு ஒரு டெம்போ டிராவலரில் ஏற்றி அழைத்துச் சென்றது போலீஸ். அதன்பிறகு காலை 7.30 மணிக்கு, சசி கலாவை எழுப்பிய ஜெ., ""எல் லோரையும் அனுப்பிட்டோம். நீயும் கிளம்பு'' என்று சொல்லி யிருக்கிறார். ""நான் போக மாட்டேன்'' என்று சசிகலா மீண்டும் சொல்ல, ""நடராஜன் கிட்டே பேசு'' என வலியுறுத்தி யிருக்கிறார் ஜெ. சசிகலாவும் நடராஜனைத் தொடர்பு கொள்ள, ""இங்கேயும் போலீஸ் வந்திடிச்சி'' என்று சொல்லி யிருக்கிறார் நடராஜன்.

நிலைமையின் விபரீதம் புரிந்த சசிகலா அப்போதும் ""கார்டனிலிருந்து வெளியேற மாட்டேன்'' என்றே சொல்லி யிருக்கிறார். ""நீயாக வெளி யேறவில்லை என்றால், உன்னை போலீஸ் அழைச்சிக்கிட்டுப் போற மாதிரி இருக்கும்'' என்று ஜெ. கடுமையான குரலில் சொல்ல, அதன்பிறகு சசிகலாவால் கார்டனில் நீடிக்க முடியவில்லை. அவருக்காக காத்துக் கொண்டிருந்த டெம்போ டிராவலரில் ஏறி உட்கார்ந்தார். காலை 10.30 மணிக்கு போயஸ் கார்டனிலிருந்து வெளியேறியது அந்த டெம்போ டிராவலர். அதுதான் கார்டனிலிருந்து சசிகலா வெளியேற்றப்பட்ட நேரம்.

"நடராஜனை சந்திக்க மாட்டேன்' என்று ஏற்கனவே ஜெ.விடம் சத்தியம் செய்திருந்தார் சசிகலா. அந்த சத்தியத்தை மீறி, நடராஜனை சந்தித்திருப்பதையும் பலமுறை பேசியிருப்பதையும் அறிந்த ஜெ, கடந்த 7-ந் தேதியன்று டி.ஜி.பி.யிடம், "என்கூட இருக்கிறவங்களே எனக்கு நம்பிக்கையா இல்லை' என்று சொல்லி யிருக்கிறார். அதைத் தொடர்ந்தே சசிகலா வின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு, பேச்சுகள் டேப் செய்யப்பட்டுள்ளன. அதுவே, அவரை கார்டனிலிருந்து வெளியேற்றி விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக