ஞாயிறு, 11 டிசம்பர், 2011

கேஸை இழுத்தடிப்பதுங்கிறதில் போயஸ் கார்டன் பி.ஹெச்.டியே வாங்கிடுவாங்க

ஒரு கேஸை எப்படி இழுத்தடிப்பதுங்கிறதில் போயஸ் கார்டன் ஆட்கள் பி.ஹெச்.டியே வாங்கிடுவாங்கஓப்பன் கோர்ட்டில் நடந்த அந்த விவாதங்களைப் பார்த்த வழக்கறிஞர்களும் பத்திரிகையாளர்களும் சொன்னது இதுதான், ஒரு கேஸை எப்படி இழுத்தடிப்பதுங்கிறதில் போயஸ் கார்டன் ஆட்கள் பி.ஹெச்.டியே வாங்கிடுவாங்க…

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெ.விடம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 313 ஸ்டேட்மெண்ட்டைப் பதிவு செய்த நிலையில், அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரிடம் 313 ஸ்டேட்மெண்ட்டுகளைப் பதிவு செய்யவேண்டும். ஜெ.வின் இசட் ப்ளஸ் பாதுகாப்பு கருதி, பரப்பனஅக்ரகாரம் சிறை வளாகத்தில் உள்ள கோர்ட்டிற்குத் தற்காலிகமாக மாற்றப்பட்டிருந்த சிறப்பு நீதிமன்றம் மீண்டும் சிட்டிசிவில் கோர்ட் கட்டிடத்தில் செயல் படத் தொடங்கிவிட்டது. அதேநேரத்தில், ஜெ.வின் வாக்குமூலப் படலம் முடிந்த நொடியிலிருந்தே, வழக்கைத் தாமதப்படுத்தும் காரியங்களையும் அவரது தரப்புத் தொடங்கிவிட்டது. ஆங்கிலத்தில் ஜெ அளித்த வாக்குமூலங்களை மற்றவர்களுக்குத் தமிழில் தரவேண்டும் என்ற மனு நவம்பர் 21-ந் தேதியன்று ஸ்பெஷல் கோர்ட்டிலிருந்து ஜெ. புறப்படும்போதே மற்ற மூவரும் தாக்கல் செய்தனர். நவம்பர் 29-ந் தேதி இதன் மீதான விசாரணை நடக்கவிருந்த போது, கண்ணில் பிரச்சினை என்று சொல்லி சசிகலா ஆஜராக வில்லை. அதனால் டிசம்பர் 8-ந் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தார் சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி மல்லிகார்ஜூனய்யா.

டிசம்பர் 8. அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் சிலரும் மன்னார்குடி சொந்தபந்தங்களும் பெங்களூருக்கு வந்திருந்தபோதும் அவர்களை ஐகான் வேலி ஓட்டலில் தங்கச் சொல்லிவிட்டது சசிகலா தரப்பு. சிட்டி சிவில் கோர்ட்டுக்கு முதலில் வந்த முன் னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், சசிகலாவுக்காகக் காத்திருந்தார். சசிகலாவும் இளவரசியும் ஒரே காரில் வந்தனர். காரிலிருந்து இறங்கியதும் சுதாகரனுடன் பேசிக் கொண்டே போன சசிகலா, ஸ்பெஷல் கோர்ட்டில் உள்ள தனி அறையில் உட்கார்ந்திருந்தபோது இளவரசியிடம் ஏனோ எதுவும் பேசவில்லை. மூவரின் சார்பிலும் ஆஜராக சீனியர் வழக்கறிஞர் சந்தானகோபாலன் வந்திருந்தார். உடன், அ.தி.மு.க வழக்கறிஞரணி மனோஜ்பாண்டியன் பதட்டமாக காணப்பட்ட சசிகலாவிடம், ""இன்னைக்கு எப்படியும் சமாளிச்சிடலாம்'' என்றார். அடுத்த வாய்தா பற்றிய நம்பிக்கை சசிகலா தரப்புக்கு வந்தது. அரசுத் தரப்பில் சிங்கிள் மேன் ஆர்மிபோல பி.பி. ஆச்சார்யா ஆஜராகியிருந்தார். நீதிபதி மல்லிகார்ஜூனய்யா தன் ஆசனத்தில் அமர்ந்ததும், குற்றவாளிக் கூண்டில் போடப்பட்டிருந்த மூன்று நாற்காலிகளிலும் இள வரசி, சசிகலா, சுதாகரன் ஆகியோர் உட்கார்ந்தனர். மனுவை விசாரணைக்கு எடுத்தார் நீதிபதி.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு வரையிலுமே படித்துள்ள சசிகலாவுக்கு ஆங்கிலத்தில் பேசவோ, எழுதவோ தெரியாது என்றும், அவரால் ஆங்கிலத் தைப் புரிந்துகொள்ளவும் முடியாது என்றும் வி.என்.சசிகலா என்று ஆங்கிலத்தில் கையெழுத்துப் போட மட்டுமே தெரியும் என்றும் மனுவில் தெரி விக்கப்பட்டிருந்தது. சசிகலாவின் வக்கீல் சந்தான கோபாலன், கோர்ட் நடவடிக்கைகள் அனைத்தும் குற்றவாளிகளுக்குப் புரியும் மொழியில் தரப்பட வேண்டும் என்றும் அதனடிப்படையில் அவர்கள் வாக்குமூலம் தரவேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டும் கொல்கத்தா உயர்நீதிமன்றமும் அளித்துள்ள தீர்ப்புகளை எடுத்து வைத்து வாதாடினார்.

அரசு வக்கீல் ஆச்சார்யா தன்னுடைய வாதத்தில், ""மொழிபெயர்ப்பு பற்றிய வாதங்கள் ஏற்கனவே முடிந்து போனவை. கர்நாடக உயர்நீதிமன்றம், சுப்ரீம்கோர்ட் வரைக்கும் அவர்கள் போனார்கள். நீதிமன்றங்கள் அளித்த உத்தரவுகளும் உள்ளன. அதனால் மீண்டும் இந்தப் பிரச் சினையை அவர்கள் கிளப்புவது தேவையற்ற வேலை'' என்றார். அதற்கு சந்தானகோபாலன், ""அப்படியென்றால் அரசு வழக்கறிஞர் சொல்வதை எழுத்துப்பூர்வமாக தரட்டும்'' என்றார். ""எல்லாவற்றையும் எழுதித் தருவதென்றால் அதற்கு 3 நாள் டயம் தேவைப்படும். அதை வைத்து டிலே செய்யலாம் என்று நினைக்கிறார்கள்'' என் றார். எனினும், அரசு வழக்கறிஞர் தன்னு டைய வாதத்தை எழுத்துப்பூர்வமாகத் தர வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

கோர்ட்டிலேயே 10 நிமிடத் தில் விறு விறுவென தன் வாதங்களை, கைப் பட எழுதிய ஆச்சார்யா அதைத் தன் உதவியா ளர் மூலம் இரண்டு ஜெராக்ஸ் போடச் சொல்லி, ஒரு காப்பி யை நீதிபதியிடம் சமர்ப்பித்தார். வாதப் பிரதிவாதங்கள், நீதிபதியின் குறுக்கீடுகள் என்று கோர்ட் பரபரப்பாக இருந்த நேரத்தில், குற்றவாளிக்கூண்டுக்குள் இருந்தபடி சசிகலா வும் சுதாகரனும் பேசிக்கொண்டிருந்தனர். கோர்ட்டில் இருந்த சசிகலா தம்பி திவாகரன் இதைக் கவனித்து, அமைதியாக இருக்கும்படி சைகை செய்தும் அவர்கள் பொருட்படுத்த வில்லை. அதே நேரத்தில், இளவரசியிடம் சசிகலா எதுவுமே பேசவில்லை.

313 ஸ்டேட்மெண்ட்டில் ஜட்ஜ் ஆங்கி லத்தில் கேட்கும் கேள்விகளை எழுத்துப்பூர்வ மாக பதிவு செய்து, அதன்பின் அதன் தமிழாக்கத்தையும் பதிவு செய்து, அதற்கு சசிகலா தரும் பதில்களைத் தமிழில் பதிவு செய்து, பிறகு அதன் ஆங்கில மொழி பெயர்ப் பையும் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் சசிகலா தரப்பு வக்கீலின் வாதம். இப்படிச் செய்தால் ஒரு கேள்வி-பதிலுக்கே ஒரு மணிநேரம் தேவைப்படும். மொத்தம் 1339 கேள்விகள் இருக்கின்றன. இதுபோல இள வரசியிடமும் பதிவு செய்யவேண்டும். அதன் பின் அவர்கள் தரப்பு சாட்சிகளின் விசாரணை யையும் பதிவு செய்யவேண்டும். இதன் மூலம் வழக்கு விசாரணை நீண்டுகொண்டே போகும். அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யாவோ, ""இது ஓப்பன் கோர்ட் விசாரணை. இத்தனை மொழிபெயர்ப்புகள் தேவையே இல்லை'' என்று வாதாடினார்.

மொழிபெயர்ப்பாளர் ஹரீஷிடம் நீதிபதி, ""கோர்ட்டுக்கு ஒத்துழைப்பு தரும் வகையில் இந்த மொழிபெயர்ப்புகளைச் செய்வதற்கு தயாராக இருக்கிறீர்களா? மனசாட்சிப்படி சொல்லுங்கள்'' என்று கேட்க, ஹரீஷும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, டிசம்பர் 13-ந் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார் நீதிபதி மல்லிகார்ஜூனய்யா.

மொழிபெயர்ப்பு தொடர்பான மனுவில் நீதிபதியின் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இல்லாவிட்டால் ஹைகோர்ட், சுப்ரீம் கோர்ட் என்று செல்லவும் சசிகலா தரப்பில் தயாராகி வருகின்றனர்.

"எங்கே சுற்றினாலும் கடைசி யில் இங்குதான் வரவேண்டும். இது ஸ்ட்ராங்கான வழக்கு' என்று நம்பிக்கையுடன் சொல் கிறார் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா.

-பெங்களூருவிலிருந்து பிரகாஷ்
thanks nakkeeran+raj trichy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக