ஞாயிறு, 11 டிசம்பர், 2011

கவர்ச்சி நல்லது!' - வித்யா பாலன்


Vidya Balan
திடர்ட்டி பிக்சர் படத்தில் நடித்த பிறகு எனக்கு ஏகப்பட்ட கவர்ச்சி வேடங்கள் குவிகின்றன. என்னைப் பொறுத்தவரை 'கவர்ச்சி நல்லது', என்று கண் சிமிட்டுகிறார் வித்யா பாலன்.
சில்க் ஸ்மிதா வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தி தர்டி பிக்சர் படத்தில் கவர்ச்சி நடிகை சில்க்காக நடித்து கலக்கி இருந்தார் வித்யா பாலன். படம் படு சூப்பராக ஓடிக் கொண்டுள்ளது.
இந்தப் படம் காரணமாக வித்யா பாலனுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் இந்தியில் வர ஆரம்பித்துள்ளதாம்.இதுகுறித்து அவர் கூறுகையில், "இதுவரை குடும்ப பாங்கான வேடங்களில் மட்டும் நடித்தேன். இதனால் நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று நினைத்துக் கொண்டார்கள். ஆனால் தி டர்டி பிக்சர்ஸ் படம் என் இமேஜை மாற்றிவிட்டது.
படம் வெளியாகும் முன்னே எனது போஸ்டர்களை பார்த்து ஆபாசமாக நடித்து இருப்பதாக பலரும் பேசினர். ஆனால் படம் வெளியான பிறகு என் கவர்ச்சிக்கு அர்த்தம் கிடைத்துவிட்டது.
கேரக்டரோடு ஒன்றியிருந்தால் கவர்ச்சி நன்றாகவே இருக்கும். இந்தப் படத்துக்கு கிளுகிளுப்பான காட்சிகள் அவசியம். அதனால் ஒப்புக் கொண்டு நடித்தேன். இதேபோன்ற வேடங்களில் நடிக்க நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் எல்லாவற்றையும் ஒப்புக் கொள்ளவில்லை. கதையில் கவர்ச்சிக்கான அவசியம் இருந்தால் நடிப்பேன்," என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக