புதன், 21 டிசம்பர், 2011

முருக இயக்கனரிடம் அந்தத் துறவி கதையைச் சொல்ல, அந்த இயக்குனர்

கடந்த தீபாவளிக்கு ஜெயன்ட் நிறுவன தயாரிப்பில், முருக இயக்குனர் இயக்கத்தில், குள்ள நடிகர் நடித்து வெளிவந்து, தமிழினத்திற்கே பெருமை சேர்த்து விட்டதாக மிகப் பெரிய பில்ட் அப் கொடுத்து, பறைசாற்றப்பட்டு வரும் அந்த படத்தின் கதை முருக இயக்குனரின் அறிவில் உதித்த கதையில்லையாம்.
இந்தக் கதை கோலிவுட்டில் வறுமையில் வாடி இன்னமும் பொறுமை காக்கும் ஒரு உதவி இயக்குனரின் கதையாம்! இது பற்றிய தகவல்கள் தான் இப்போது கோலிவுட்டை குலுக்கியும் கலக்கியும் வருகிறது.
கதை திருடப்பட்டது எப்படி? தயாரிப்பாளர் விஸ்வாஸ் சுந்தரிடம் ஒரு கதை சொல்லி பட வாய்ப்பு பெற போயிருகு்கிறார் தங்கர்பச்சானின் உதவியாளர் கோபி., அவரிடம் கதை கேட்ட தயாரிப்பாளர் சுந்தர், இந்தக் கதையை ஜெகனிடம் சொல்லுங்கள் என்றிருக்கிறார்,
மரிக்கொழுந்து படத்தை இயக்கிய ஜெகன் அப்பொழுது விஸ்வா சுந்தரின் கதை கேட்பாளர். ( தற்போது முருக இயக்குனரின் கதை கேட்பாளர் கம் உதவி இயக்குனர்). உடனடியாக ஜெகனிடம் அந்த கதையைச் சொன்ன கோபியிடம் வேறு ஏதும் கதை இருக்கிறதா என விளையாட்டாக ஜெகன் கேட்க., கோபியும் பெரிய பட்ஜெட்டில் படம் பண்ணுவதென்றால் தன் வசம் இருந்த புத்த துறவி பற்றிய கதையை பிரமாண்டமாக எடுப்பதென்றால் எடுக்கலாம் எனக்கூறி டைட்டிலுடன் சொல்லி இருக்கிறார். கதையை ஊம்... கொட்டி கேட்ட ஜெகன் சரி தகவல் சொல்லி அனுப்புகிறேன் எனக்கூறி கோபியை அனுப்பி வைத்துள்ளார்.
இது நடந்த சில மாதங்களில், விஸ்வாஸ்சுந்தரின் படத்திட்டம் ஒரு சில காரணங்களால் அப்பொழுது கைவிடப்பட அங்கிருந்து வெளிவந்த ஜெகன் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் என்பதால், முருக இயக்குனரின் ஆஸ்தான கம்பெனி கதை கேட்பாளர் ஆகிவிட்டார். ஜெகன் ஒருநாள் பேச்சுவாக்கில் முருக இயக்கனரிடம் அந்தத் துறவி கதையைச் சொல்ல, அந்த இயக்குனர் அதிகாலை 4 மணிக்கு கோபியிடம மொத்த கதையையும் கேட்டுவிட்டு அவரிடம் சொல்லாமல் கொள்ளாமல் படமாக்கிவிட்டார்.
தனக்கு "பாக்ஸ் ஆபீஸ்-ல்" இருந்து படம் கிடைக்கும் என காத்திருந்த கோபி ஏமாந்துவிட்டார். இதை எல்லாம் காட்டிக்கொள்ளாமல் துறவி பற்றிய அந்தக் கதையை தானே கண்டுபிடித்தது போல பத்து கோடி சம்பளத்தில் படமாக்கி கோபிக்கு பட்டை நாமம் சாத்தி விட்டாராம் பாவம்!


திருட்டுக்கதை பற்றிய விஷயம் குள்ள நடிகருக்கும், ஜெயன்ட் தயாரிப்பாளருக்கும் தெரியுமா?!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக