சனி, 24 டிசம்பர், 2011

சாப்பிடாத சசிகலா. தினமும் கார்டனில் சோ இருக்கிறாராம்

‘‘இந்த நடவடிக்கை உண்மையானதுதானா?’’
‘‘முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள் உறுதியான நடவடிக்கைதான் என்று சொல்கிறார்கள். சசிகலா குடும்பத்தினர் மீதான கோபம் ஜெயலலிதாவுக்கு இன்னும் குறையவில்லை என்றே சொல்கிறார்கள்.’’
எம்.ஜி.ஆர். பாணி கவனிப்பு!
‘‘மேற்கு மண்டலத்துக்கு பொறுப்பாளராக இருந்தவரையும், மதுபான ஆலைக்கு பொறுப்பானவரையும் கார்டனுக்கே அழைத்து வந்து எம்.ஜி.ஆர். பாணியில் விசாரித்ததாகச் சொல்கிறார்கள். அவர்களின் வீடுகளில் போலீஸார் ரெய்டு நடத்தியிருக்கிறார்கள். மதுபான ஆலைக்கு பொறுப்பாளராக இருந்தவருக்கு மட்டும் சென்னையில் 56 வீடுகள் இருக்கிறதாம். அதற்கான ஆவணங்களும் போலீஸ் கையில் சிக்கியுள்ளதாம்...’’
சாப்பிடாத சசிகலா...
‘‘திவாகர் எங்கே இருக்கிறாராம்?’’ ‘‘மன்னார்குடியில் திவாகர் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே போய்விட்டாராம். அவர் எங்கு இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை. சுதாகரன், பாஸ்கரன் உள்பட அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சென்னையில் இருப்பதாகவே சொல்கிறார்கள்.’’

‘‘சசிகலா எங்கே?’’

‘‘இளவரசியின் இரண்டாவது மகள் வீட்டில் சசிகலாவும் இளவரசியும் தங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் குடும்ப உறுப்பினர்கள் யாரையும் அவர் சந்திக்கவில்லை என்றே சொல்கிறார்கள். போயஸ்கார்டனை விட்டு வெளியேறிய அன்று சசிகலா சாப்பிடவே இல்லையாம். நீண்ட நேரம் அழுது கொண்டே இருந்ததாகவும் சொல் கிறார்கள். இன்னும் சகஜ நிலைக்கு அவர் வரவில்லை என்றே அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.’’

வேகம் காட்டும் போலீஸ்!

‘‘இவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்..?’’

‘‘அதைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் போலீஸார் ரொம்ப வேகமாகவே நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு முதல்வர் தரப்பில் இருந்து முக்கியமான அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறதாம். அதற்காக அப்படி வேகம் காட்டுகிறார்களாம். இதோடு முடியவில்லை என்கிறார்கள். அவர்களின் பரிந்து ரையில் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பற்றிய விவரங்களை உளவுத்துறை மூலம் சேகரித்து வைத்துள்ளாராம் முதல்வர். அவர்களை களையெடுக்கும் வேலையும் அடுத்தடுத்து நடக்கவுள்ளதாம்.’’

அமைச்சர்களின் கதி?

‘‘அமைச்சர்கள் யார் யார் மீது கோபமாக இருக்கிறாராம்..?’’

‘‘மன்னார்குடி குடும்பத்துக்கு நெருக்கமான வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்திலிங்கம், ராவணனால் அமைச்சராக்கப்பட்ட மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த எஸ்.பி.வேலு மணி, ஆனந்தன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கே.வி.ராமலிங்கம், தென் மாவட்டத்தில் சில அமைச்சர்கள் மாற்றப்படலாம் என்கிறார்கள். கட்சியில் மாவட்டச் செயலாளர்கள் பலரும் மாற்றப்படலாம் என்கிறார்கள். இந்த மாற்றங்களை கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவுக்குப் பிறகு செய்யலாமா? அல்லது மாற்றங்களைச் செய்துவிட்டு பொதுக்குழு கூட்டத்துக்குப் போகலாமா என்று முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.’’

‘‘ஒரே நேரத்தில் இத்தனை பேரையும் மாற்றுவார்களா?’’

‘‘இப்போதெல்லாம் அமைச்சர்களை தினமும் கோட்டையில் முதல்வர் சந்தித்துப் பேசுகிறார். அவர்கள் துறை சார்ந்த விஷயங்களை விவாதிக்கிறார். அப்போது மூத்த அமைச்சர்கள் சிலரிடம், ‘அமைச்சர்கள் பலரும் சசியோடு தொடர்பில் இருந்தார்கள் என்பது எனக்குத் தெரியும். நான் சொன்னதால்தான் அவர்கள் இதைச் செய்தார்கள். அதனால் இவர் அவருடைய ஆள் என்று என்னிடம் யாரும் சொல்ல வேண்டாம். இனிமேல் அவர்கள் ஒழுங்காக இருக்கிறார்களா என்று பாருங்கள். அவர்களுக்கும் சசிக்கும் தொடர்பு இருந்தால் மட்டும் என்னிடம் சொல்லுங்கள். கட்சி நிர்வாகிகள் விஷயத்திலும் இந்த நடைமுறையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும். இனி அடிக்கடி க ட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்துப் பேசுவேன்’ என்று சொன்னதாகத் தகவல்.’’

பழி ஓரிடம்... பாவம் ஓரிடம்!

‘‘கட்சி தொடர்பான ஆலோசனைகள் யார் யாருடன் நடத்துகிறார்?’’

‘‘கட்சி விவகாரங்களை செங்கோட்டையன், மைத்ரேயன் ஆகியோரிடம் ஆலோசனை நடத்துகிறாராம்...’’

‘‘கட்சிப் பத்திரிகையான ‘நமது எம்.ஜி.ஆர்’, ஜெயா டி.வி. ஆகியவற்றை யார் கவனிக்கப் போகிறார்களாம்?’’

‘‘டி.வி.யையும் பத்திரிகையையும் கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி நடந்து வருகிறதாம். ‘நமது எம்.ஜி.ஆர்.’ பத்திரிகை எம்.டி.யாக இருந்த சிவகுமாரை நீக்கிவிட்டதாக அவருக்குத் தகவல் சொல்லப்பட்டுவிட்டதாம். இந்தப் பிரச்னைக்கு அப்புறம் ஜெயா டி.வி. அலுவலகத்துக்கு அனுராதா வருவது இல்லையாம். அவர் குடும்ப உறுப்பினர்கள் யாருடனும் தொடர்பு கொள்ளாமல் டி.டி.வி. தினகரனுடன் வெளியூர் சென்று விட்டாராம். ஆறு வருடங்களாக கட்சிப் பணியில் இருந்து ஒதுங்கி இருக்கும் டி.டி.வி. தினகரனையும் நீக்கியதில் அவருக்கு கொஞ்சம் வருத்தமாம். பழி ஓரிடம் பாவம் ஓரிடமா என்று வருத்தப்படுவதாகச் சொல்கிறார்கள்.’’

யார் கவனிப்பார்கள்?

‘‘முதல்வரையும் போயஸ் கார்டனையும் யார் பார்த்துக் கொள்கிறார்களாம்?’’

‘‘ஆட்சியில் இருப்பதால் அதற்கெல்லாம் ஆட்கள் கிடைக்காமலா போய்விடுவார்கள். முதல்வரின் உடல் நிலையை நர்ஸ் ஒருவர் கவனித்துக் கொள்கிறார். ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமனின் மகள் தீபா, கார்டனில் அடிக்கடி தென்படுகிறாராம். சட்ட மேற்படிப்பை முடித்திருக்கும் தீபாவை முதல்வருக்கு ரொம்பவே பிடிக்கும். அதனால் அவரை உடன் வைத்துக் கொள்வார் என்றும் சொல்கிறார்கள். இன்னொரு தகவலும் கார்டன் வட்டாரத்தில் உலா வருகிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது டி.எ ன்.பி.எஸ்.சி. உறுப்பினராக நீலாம்பரி என்பவர் இருந்ததாகவும், அவருடைய கணவர் கூடுதல் பி.பி.யாக இருந்தவராம். அவருக்கு முக்கியமான பணி கார்டனில் கிடைக்கும் என்கிறார்கள்.’’

‘‘ஆட்சியை நடத்த யார் வழி காட்டுவார்கள்?’’

‘‘ஆட்சியை வழிநடத்த சோ தலைமையில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைக்க இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தக் குழுவில் ஹரிபாஸ்கர், கு.பிச்சாண்டி, நாராயணன், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான ஆர்.ராஜகோபாலன் உள்பட பலர் இருப்பார்களாம். இவர்களை எல்லாம் சமீபகாலமாக கார்டனில் பார்க்க முடிகிறதாம். தினமும் கார்டனில் நடக்கும் முக்கிய கூட்டங்களில் சோ இருக்கிறாராம். அவர் நான்கைந்து மணி நேரம் கார்டனில் கழிக்கிறாராம்.’’

குவியும் புகார்!

‘‘எல்லாம் சரி... இந்த நடவடிக்கைகளுக்குக் காரணம் என்னவாம்?’’

‘‘அரசியல் வட்டாரத்தில் இதுபோன்ற நேரத்தில் வதந்திகள் றெக்கை கட்டிப் பறக்கும்... இந்தப் பிரச்னையின் தொடக்கப் புள்ளியாக மக்கள் செய்தி ஒலிபரப்புத் துறையில் ஏ.டி.யாக சரவணன் என்பவரை நியமித்ததைச் சொல்கிறார்கள். இவர் கடந்த ஆட்சியில் அழகிரியிடம் மிகவும் நெருக்கமாக இருந்தவர். இவர் மீது தேர்தல் பிரசாரத்தின் போது ஜெயலலிதாவே குற்றம்சாட்டினார். இது முதல்வரின் கவனத்துக்குப் போனதும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சசிகலா குடும்பத்தினர் ஒவ்வொருவர் பற்றியும் தகவல்களைக் கேட்டு வாங்கி நடவடிக்கை எடுத்துள்ளார்.’’

‘‘மற்றவர்கள் மீது என்ன புகார்கள் வந்ததாம்...?’’

‘‘மோனோ ரயில் திட்டத்துக்காக மலேசியாவைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரை அழைத்து வந்துள்ளார்கள். அவர் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த தகுதியான ஆள் இல்லையாம். அவருக்காக பல சட்டதிட்டங்கள் வளைக்கப்பட்டதாம். இந்த விஷயங்கள் எதுவும் முதல்வர் கவனத்துக்குச் செல்லாமல் பார்த்துக் கொண்டதாகச் சொல் கிறார்கள். இந்தத் தகவல்கள் உளவுத்துறை மூலம் முதல்வர் கவனத்துக்குப் போனதும் உஷாராகியிருக்கிறார். இதுபோல வேறு என்ன நடந்தது என்று தோண்டச் சொல் லியிருக்கிறார்.’’

‘‘அவர்கள் தரப்பில் இன்னும் யாரும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. ஆனால் அரசியல் வட்டாரத்தில் இன்னொரு தகவல் உலா வருகிறது. சசிகலாவின் உறவுகள் சிலர் பெரும் தொகையை கார்டனுக்குக் கொடுக்காமல் இருக்கிறார்களாம். அவர்களிடம் அது பற்றி கேட்டால் உறவில் சிக்கல் வரும் என்று சசிகலா சொன்னதாகவும், அதை வசூலிக்கவே சசிகலாவை வெளியேற்றுவதுபோல வெளியேற்றி போலீஸை வைத்து வசூலிக்கப் போகிறார்கள். ரெய்டுகள் எல்லாம் அதைத்தான் காட்டுகிறது என்று சொல்கிறார்கள்.’’

மகாதேவனின் யாகம்!

‘‘ஸ்ரீரங்கத்தில் மகாதேவன் யாகம் நடத்தினாராமே...?’’

‘‘சனிப் பெயர்ச்சி அன்று யாகம் நடத்தியிருக்கிறார். அவர் மன்னார்குடியில் இருந்து ஸ்ரீரங்கத்துக்கு காரில் வந்திருக்கிறார். அவர் காருக்கு முன்னும் பின்னும் கறுப்புப் பூனைப்படையினர் அணி வகுத்து வந்துள்ளனர். இந்த ஏற்பாடுகள் எல்லாம் முன்கூட்டியே செய்யப்பட்டதாம். ஆனால் கடைசி நேர மாற்றங்களை அறிந்த சுந்தர் பட்டர் ‘உடல் நலம் இல்லை’ என்று வீட்டிலேயே இருந்து கொண்டாராம். வேறு பட்டர்களை வைத்து யாகத்தை முடித்துவிட்டுக் கிளம்பியிருக்கிறார் மகாதேவன். இது குறித்த தகவல்கள் முதல்வர் கவனத்துக்கு வந்திருக்கிறது.’’

வழக்கின் போக்கு?

‘‘எல்லாம் சரி... இருவரும் பிரிந்துவிட்ட நிலையில் பெங்களூருவில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கு என்னவாகும்?’’

‘‘இது குறித்தும் கார்டனில் தீவிர ஆலோசனை நடந்து இருக்கிறது. மூத்த வழக்கறிஞர்களுடன் நடந்த இந்த ஆலோசனையின் போதும் சோ இருந்துள்ளார். கடைசியில் ‘பெங்களூரு வழக்கை அவர்களோடு சேர்ந்தே சந்திப்பதுதான் நல்லது. வழக்கு முடியும் வரையில் அவர்கள் நம்மோடு இருக்க வேண்டியது அவசியம்’ என்று ஜெயலலிதாவிடம் சொல்லப்பட்டதாம். இதை முதல்வர் ஏற்றுக் கொண்டாராம். அ.தி.மு.க.வின் வழக்கறிஞர்கள்தான் இப்போது சசிகலாவுக்கும் ஆஜராகிறார்கள். அவர்களே தொடர்ந்து ஆஜராவார்கள் என்கிறார்கள்.’’

‘‘மனோஜ் பாண்டியன் விலகிவிட்டதாகச் சொன்னார்களே...’’

‘‘ஒருவேளை அவருக்கு இந்த விஷயம் சொல்லப்படாமல் இருந்து இருக்கலாம். முதல்வர் சசிகலாவை நீக்குவதாகச் சொன்னதால் அவரே அவசரப்பட்டு மனு போட்டி ருக்கலாம்.’’

‘‘முதல்வர் அலுவலகத்தில் மாற்றம் வருமா?’’

‘‘முதல்வரின் செயலாளர்கள் மட்டத்தில் மாற்றம் வரும் என்கிறார்கள். அநேகமாக இறையன்பு முதல்வரின் செயலாளர்களில் ஒருவராக வரலாம் என்று சொல்லப்படுகிறது.’’

‘‘நல்ல சாய்ஸ்...’’ என்று சிஷ்யை சொல்லவும் இருக்கையில் இருந்து எழுந்து கொண்டார், சுவாமி வம்பானந்தா. சிஷ்யைக்குப் பின்னால் வி.ஐ.பி. ஒருவர் வந்து நிற்க, அங்கிருந்து புறப்பட்டார்.

ரீலா, ரியலா?!

அ.தி.மு.க.வில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தி.மு.க.வில் தீவிர விவாதங்கள் போய்க்கொண்டிருக்கிறது. இது குறித்து நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பலர் இது உண்மையா? டிராமாவா? என்பது தெரியாமல் புலம்பியிருக்கிறார்கள்.

இக்கூட்டத்தில் அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை செய்தார்களாம். இந்த ஆலோசனையின் போது, ‘சசிகலா நீக்கம் உண்மையாக இருக்கும்பட்சத்தில் அரசியலில் என்னென்ன மாற்றங்கள் வரும். அதை எப்படி நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்றும் ஆலோசனை நடத்தியி ருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து பொங்கல் முடிந்ததும், கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டலாம் என்று முடிவு செய்திருப்பதாக சொல்கிறார்கள். இந்த செயற்கு ழுவில் கனிமொழிக்கு பதவி கொடுப்பது பற்றியும் முடிவெடுக்கப்படலாம் என்று மேல்மட்டத் தலைவர்கள் சொல்கிறார்கள்.
thanks kumudam +rahuman HCM City

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக