வியாழன், 8 டிசம்பர், 2011

சுவாமிக்கு அடித்தது லக்… சிதம்பரம் இப்போது

Viruvirupu
Delhi, India: Special CBI court today (Thursday) allowed Janata Party chief Subramanian Swamy to depose himself as a witness. This will allow the complainant (Swamy) is permitted to recall himself as complainant witness one for leading further evidence.The court directed Swamy to appear in the witness box on December 17 to lead further evidence in support of his complaint against Minister P.Chidambaram.

உட்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை விடுவதில்லை” என்பதில், திடமாகத்தான் உள்ளார் சுப்ரமணியன் சுவாமி. இன்று (வியாழக்கிழமை) சுவாமிக்கு உகப்பான சேதி ஒன்று, பட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்தில் கிடைத்திருக்கின்றது. அமைச்சர் சிதம்பரத்துக்கு எதிரான பிரதான சாட்சியாக தன்னைத்தானே அழைத்துக்கொள்ள சுவாமிக்கு அனுமதி வழங்கியுள்ளார் நீதிபதி ஓ.பி.சைனி.
அவரே அவரை எப்படி சாட்சியாக அழைத்துக் கொள்வது என்று சிலருக்கு கொஞ்சம் குழப்பமான விவகாரமாகவும் இது இருக்கலாம். ஆனால், நீதிமன்ற நடைமுறையில் இது அவருக்கு சாதகமான விஷயமே.
ப.சிதம்பரத்துக்கு எதிராக தாம் அழைக்க விரும்பும் சாட்சிகளின் பட்டியல் ஒன்றை சில நாட்களுக்கு முன்னர் கோர்ட்டில் சமர்ப்பித்த சுவாமி, அவர்களை சாட்சிகளாக அழைக்க அனுமதி கோரியிருந்தார். (விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) தன்னிடம் முக்கிய பைல் ஒன்று உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

கோர்ட்டின் விசாரணை இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.  இன்று பைல் எதையும் அவர் காட்டவில்லை. காரணம், அதைவிட பெரிய மீன் சிக்கியிருக்கிறது, தன்னைத் தானே சாட்சியாக்கிக் கொள்ளும் அனுமதி கிடைத்திருக்கிறது!
சுவாமியால் சமர்ப்பிக்கப்பட்ட பட்டியலில் சி.பி.ஐ. உயரதிகாரிகள் உட்பட சில முக்கிய வி.ஐ.பி.கள் உள்ளனர். இவர்களை சாட்சிகளாக அழைத்து விசாரித்தால், அடுத்த கட்டமான அமைச்சர் சிதம்பரத்தை கூண்டில் ஏற்ற முடியும் என்பதே சுவாமியின் வியூகம்.
ஆனால், சி.பி.ஐ. உயரதிகாரிகளையும், சுவாமியின் பட்டியலில் உள்ள மற்றையவர்களையும் சாட்சிகளாக அழைப்பதில் சி.பி.ஐ.-க்கு சில சங்கடங்கள் உள்ளன. அதைக் கருத்தில் கொண்டு சுவாமியின் பட்டியலை நீதிமன்றம் நிராகரிக்கும் என்ற நிலை இருந்தது. அப்படியான நிலையில் அதை அப்படியே விட்டுவிடாமல், தமது சாட்சிகளில் முதன்மைச் சாட்சியாக தன்னையே முன்னிறுத்தியிருக்கிறார் சுவாமி.
இந்த நடைமுறை எப்படி வேலை செய்யும் என்றால், வழக்கைத் தொடுத்தவரும் அவரே, சாட்சியும் அவரே என்ற வசதியை வைத்துக்கொண்டு, தனது சாட்சியத்தின் மூலம், பட்டியலில் உள்ள மற்றையவர்கள் இந்த வழக்கில் சாட்சியாக அழைக்கப்படுவது ஏன் அவசியம் என்பதை சுவாமியால் சுலபமாக எஸ்டாபிளிஷ் பண்ண முடியும்.
பட்டியாலா ஹவுஸ் கோர்ட், சுவாமி சாட்சிக் கூண்டில் ஏறுவதற்கான தேதியை டிசம்பர் 17 என்று குறித்திருக்கின்றது.
இந்த வழக்கில் சுவாமியின் மெயின் ஆர்க்யூமென்ட் என்ன தெரியுமா? “குற்றப்பத்திரிகையில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மீது சுமத்தப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளும், இன்னாள் அமைச்சர் சிதம்பரம் மீதும் சுமத்தப்பட வேண்டும்” அந்தத் திசையை நோக்கியே, சுவாமியின் சாட்சியமும் அமையும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.
சும்மாவே ஏதாவது சொல்லி பரபரப்பைக் கிளப்பும் சுவாமி, சாட்சிக்கூண்டில் ஏறி என்னவெல்லாம் சொல்லப் போகிறாரோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக