திங்கள், 5 டிசம்பர், 2011

ஈரோடு மேயர் மல்லிகா இது தாண்டா மல்லிகா

ஈரோடு மேயர் மல்லிகா அடித்த சிக்ஸர்! அருகில் நின்ற நபருக்கு பிராக்ஸர்!!

Viruvirupu

Erode, India: BJP state president Pon Radhakrishnan condemn the misbehavior of Erode Mayor Mallika Paramasivam. Mr. Radhakrishnan said a photographer of a Tamil daily Kalai Kadir, sustained injuries after being allegedly physically assaulted by AIADMK Mayor.

“அ.தி.மு.க.வில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஒரு புதிய நட்சத்திரம் ஈரோடில் உருவாகின்றது! மேயராகப் பதவியேற்ற ஓரிரு நாட்களிலேயே அமைச்சர் முதல், அதிகாரிகள் வரை பலரையும் அலற வைக்கிறார் ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவம்” இது தாண்டா மல்லிகா

கடந்த அக்டோபர் 31-ம் தேதி விறுவிறுப்பு.காம் வெளியிட்ட செய்தி, மேலே குறிப்பிட்ட வாக்கியங்களுடன் ஆரம்பமாகியிருந்தது.
இந்த ஒரு மாத காலத்தில் மேயர் நன்றாக முன்னேறிவிட்டார். அப்போதெல்லாம் தனது வார்த்தைகளால் ஆட்களை அலறவைத்த மேயர், இப்போது வெறும் வார்த்தைகளோடு நின்றுவிடுவதில்லை. கையை முறுக்கி அலற வைக்கிறார்.
விஜயசாந்தி தெலுங்கு டப்பிங் படக் காட்சிபோல மேயர் வீரசாகசம் செய்த நிஜ சம்பவம் ஒன்று சமீபத்தில் ஈரோடில் நடைபெற்றதற்கு, பாரதீய ஜனதா காட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன், “இந்தப் பெண்மணி மேயர் பதவிக்கே தகுதியற்றவர்” என்று கூறியுள்ளார்.

அருப்புக் கோட்டையில் பாரதீய ஜனதா கட்சி நடாத்திய பயிற்சி முகாம் ஒன்றில் பங்கேற்ற வந்த ராதா கிருஷ்ணன், “ஈரோடு மாநகராட்சி மேயர் மல்லிகாவின் நடத்தைகள், ஆளும் கட்சியின் ஆணவத்தை காட்டுகிறது. மேயர் பதவிக்கு தகுதியற்றவர் மல்லிகா. இவரை மேயர் பதவியிலிருந்து தூக்கியெறிய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேயர் நடாத்திய தாக்குதலை பா.ஜ.க. கண்டிக்கிறது” என்றார்.
இவர் கண்டிக்கும் அளவுக்கு நம்ம மேயர் அப்படி என்னதான் செய்துவிட்டார்? பெரிதாக ஒன்றுமில்லை. நாலைந்து நாற்காலிகளைத் தூக்கி வீசினார், பப்ளிக்காக எழுத முடியாத வார்த்தைகளில் பப்ளிக்கில் திட்டினார், ஒரேயொருவரை மாத்திரம் கையைப் பிடித்து முறுக்கி அருகே உள்ள கழிவறை பகுதிக்குள் தள்ளினார். அவ்வளவுதான்.
சிக்கல் என்னவென்றால், மேயர் தனது புஜபல பராக்கிரமத்தைக் காட்டிய இடம் ஒரு பத்திரிகை அலுவலகமாகப் போய்விட்டது.
காலைக்கதிர் பத்திரிகை நம்ம மேயர் தொடர்பான செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. ஈரோடு மாநகராட்சி கட்டடங்களை வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மேயரை, கட்சிக்காரர்கள் எவரும் கண்டு கொள்ளவில்லை என்பதுதான் பத்திரிகை வெளியிட்ட செய்தி.
மேயர் சமீபத்தில் ‘மயக்கம் என்ன” சினிமா பார்த்தாரோ என்னவோ, “அடிடா அவனை.. புடிடா அவனை.. உதைடா அவனை” என்று பாடிக்கொண்டு காலைக்கதிர் அலுவலகத்துக்குள் புகுந்து விட்டார். உள்ளே அதகளம்தான். ஈரோடு டவுன் டி.எஸ்.பி. தனபால், கிரைம் இன்ஸ்பெக்டர் ஆறுச்சாமி ஆகியோர் மேயரின் போர்க்களம் குறித்து கேள்விப்பட்டு பத்திரிகை அலுவலகம் வந்து அவரை சமாதானம் செய்து வெளியே அனுப்பி வைக்க வேண்டியதாகி விட்டது.
“ஒரு பெண் நள்ளிரவில் தனியாக நடந்து செல்லும் நிலை எப்போது வருமோ, அப்போதுதான் இந்த நாட்டுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம்” என்ற கூற்றுக்கு மேயர் பதில் கொடுத்துவிட்டார். நம்ம மல்லிகா இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்துவிட்டார்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக