ஞாயிறு, 25 டிசம்பர், 2011

Annaவுக்கு போட்டியாக Kalaam ஊழலை ஒழிக்க 3 அம்ச திட்டம்: அறிவித்துள்ளார் அப்துல் கலாம்

புதுடில்லி: ஊழலை ஒழிக்க, மூன்று அம்ச திட்டத்தை, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.
அப்துல் கலாம் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஊழலில் ஈடுபடும் நபர்களை தண்டிப்பதற்கு, லோக்பால் மசோதா உதவும் என்பதில், எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், ஊழலை விரைவில் ஒழிப்பதற்கு, வேறு சில நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதற்கான நடைமுறைகளை உருவாக்க வேண்டும். ஊழலில் இருந்து, நாட்டை விடுவித்து, அமைதியான சூழலை உருவாக்க, மூன்று அம்ச திட்டத்தை செயல்படுத்தலாம். ஒழுக்க பண்புகளுடன் கூடிய கல்வி, ஊழலால் ஏற்படும் பிரச்னைகளை பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது, தேசத்திடம் இருந்து நாம் எதிர்பார்ப்பதை விட, தேசத்துக்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை சிந்திப்பது ஆகிய, மூன்று அம்ச திட்டங்களை செயல்படுத்தலாம். லோக்பாலுடன் சேர்த்து, இந்த திட்டங்களையும் செயல்படுத்துவதன் மூலம், ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்க முடியும். இவ்வாறு அப்துல் கலாம் கூறியுள்ளார். அன்னாவுக்கு போட்டியாக கலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக