திங்கள், 26 டிசம்பர், 2011

விபசாரம்: டி.வி. நடிகை உள்பட 6 பெண்கள், 2 புரோக்கர்கள் கைது!

கோவை அருகே சொகுசு பங்களாவில் விபசாரம் செய்த டி.வி. நடிகை உள்பட 6 பெண்களையும் 2 புரோக்கர்களையும் போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் உள்ள சொகுசு பங்களாக்களில் விபசாரம் அதிக அளவில் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
குறிப்பாக சென்னையிலிருந்து சிவி, சினிமா துணை நடிகைகள் பலர் இந்தப் பங்களாக்கு வந்து போவதாக தகவல் கிடைத்தது. எனவே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கோவில்பாளையத்தை அடுத்த கோட்டைபாளையம் வி.ஜே.நகரில் உள்ள ஒரு சொகுசு பங்களாவுக்கு இரவு நேரத்தில் விலை உயர்ந்த கார்கள் வந்து செல்வதாக தகவல் கிடைத்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த பங்களாவுக்கு விலை உயர்ந்த 3 கார்கள் சென்றன.
உடனே போலீசார் அதிரடியாக பங்களாவுக்குள் நுழைந்தனர். அங்குள்ள ஒவ்வொரு அறையிலும் அழகிகளும், வாடிக்கையாளர்களும் இருந்தனர்.
இதையடுத்து அங்கு இருந்த அழகிகள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களை விசாரணை செய்த போது சென்னையை சேர்ந்த டி.வி.நடிகை ஸ்ரீலட்சுமி (வயது 21), கர்நாடக மாநிலத்தை சேர்ந்த டான்சர்கள் சிந்து (20), ஷீபா(21), கேரளாவை சேர்ந்த காயத்திரி மற்றும் ஆந்திராவை சேர்ந்த கவிதா(21) என தெரியவந்தது.
மற்றொரு அறையில் இருந்த வேலைக்கார பெண் லட்சுமி (41), புரோக்கர்கள் பாலாஜி (38) மற்றும் கிருஷ்ண மூர்த்தி(47) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பாலாஜியும், கிருஷ்ணமூர்த்தியும் புரோக்கர்கள் எனவும், இன்டர்நெட் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு, அழகி தேவை என வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டால் அழகிகளை அனுப்பி வைப்பார்.
ஒரு அழகியை அழைத்து சென்றால் 5 நாட்கள் வரை அவர்களை இஷ்டப்படி அனுபவிக்கலாம். இதற்கு கட்டணமாக ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும். 5 நாட்களுக்கும் அவர்களை எங்கு வேண்டும் என்றாலும் அழைத்து போகலாம், என்ற உத்தரவாதம் கொடுத்த பின்னரே அழகிகளை அனுப்பி வைத்துள்ளனர். இந்தப் பெண்களை அழைத்துச் செல்ல இடம் இல்லாத வாடிக்கையாளர்கள் நேரடியாக இந்த சொகுசு பங்களாவுக்கு வந்தால் போதுமாம். அங்கு அவர்களுக்கு பிடித்த அழகிகளை தேர்வு செய்து கொள்ளலாம்.
வாடிக்கையாளர்கள் விரும்பும் உடை
அங்கு வாடிக்கையாளர்கள் மனம் நோகாதபடி, அவர்களின் தேவை அறிந்து அழகிகள் நடந்து கொள்வார்கள். அவர்களுக்கு பிடித்த உடை அணிந்து கொள்வார்கள். வாடிக்கையாளர்கள் கொடுக்கும் ரூ.50 ஆயிரத்தில் புரோக்கர்கள் ரூ.25 ஆயிரத்தை எடுத்துக்கொள்வார்கள். மீதி ரூ.25 ஆயிரம் இந்தப் பெண்களுக்கு.
அழகிகள் கைது செய்யப்பட்ட அறையில் இருந்து 11 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக