ஞாயிறு, 6 நவம்பர், 2011

TNA பாராளுமன்ற உறுப்பினர் ஹெரோயின் போதைப் பொருள் கடத்தலில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஹெரோயின் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக-லக்பிம தகவல் வெளியிட்டுள்ளது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஹெரோயின் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தலுடன் n;தாடர்புடைய சில நபர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்திய போது இந்த தகவல் அம்பலமானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கை குறித்து தலைமன்னார் காவல்துறையினர் தகவல்களை திரட்டியுள்ளனர்.
குறித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் நீண்ட காலமாக போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்தியாவிலிருந்து தலை மன்னார் வழியாக குறித்த பாராளுமன்ற உறுப்பினர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இரண்டு கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் அண்மையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயங்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.
போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தலைமன்னார் காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக