செவ்வாய், 1 நவம்பர், 2011

திருஅண்ணாமலையார் கோயிலில் ஊழலோ ஊழல்




திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயில் மிகவும் பிரபலமானது. தினமும் ஆயிரக்கணக்கிலும், பௌர்ணமியன்று லட்ச கணக்கிலும் பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலுக்கு வருகின்றனர்.
கோயிலில் கடந்த 7 ஆண்டுகளாக அன்னதான திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது என்றும், கோயில் அலுவலத்தில் கோயில்களுக்கான மளிகை மற்றப்பொருட்கள் எங்கு வாங்கப்படுகிறது என தகவல் பெறும் உரிமை சட்டத்தின் படி இந்து முன்னணியின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சங்கர், கேள்வி கேட்டுள்ளார்.
ஆனால் கோயில் தரப்பில் தகவல் தராமல், இவைகளை தரமுடியாது என்றுள்ளனர். இதனால் கோபமான இந்து முன்னணியினர் கோயிலில் நடக்கும் ஊழல்களைப்பற்றி விசாரணை நடத்த வேண்டும். ஊழல் செய்தவர்களை பணியை விட்டு நீக்க வேண்டும் என 15.11.2011 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதுப்பற்றி நம்மிடம் பேசிய சங்கர், அண்ணாமலையார் கோயிலில் ஊழல் அதிகமாக நடக்கிறது. அதை தடுக்கவே போராடுகிறோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக