செவ்வாய், 1 நவம்பர், 2011

வடக்கு அபிவிருத்தி குறித்து யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் ஆராய்வு

யாழ்.மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் தலைமையில் இன்று திங்கள் கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மீள்குடியேற்றம், வீதி அபிவிருத்தி, கடற்றொழில் வீட்டுத்திட்டம், விவசாய அபிவிருத்தி, குடிநீர்த்திட்டம், சுகாதார சேவைகள், மினிவிநியோகம், கல்வி அபிவிருத்தி தொடர்பாக முன்மொழிவுகள் செய்யப்பட்டு ஆராயப்பட்டன.
இதில் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஈ. சரவணபவன், சி.சிறிதரன், திருமதி விஜயகலா மகேஸ்வரன், சில்வேஸ்திரி அலன்ரின் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி அரச அதிபர்கள், வடமாகாண ஆளுநரின் செயலாளர் ஆ.சிவசுவாமி மற்றும் யாழ்.மாநகர முதல்வர், பிரதேச செயலளர்கள், பிரதேச சபைத் தலைவர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக