புதன், 9 நவம்பர், 2011

சீல்வைப்பு நடவடிக்கை: தி.நகரில் நாளை கடைகள் அடைப்பு; வியாபாரிகள் அறிவிப்பு!

சென்னை: ரங்கநாதன் தெரு வியாபாரிகள் சங்க தலைவர் சித்திரைபாண்டியன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.நகர் ரங்கநாதன் தெருவில் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டதாக கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதால் அங்குள்ள வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
10 நாட்களாக கடைகள் மூடிக் கிடப்பதால் வியாபாரிகள் பெரிய நஷ்டம் அடைந்துள்ளனர். இந்த விஷயத்தில் முதல்-அமைச்சரை சந்தித்து பேச வாய்ப்பு தருமாறு மனு கொடுத்திருக்கிறோம். சுப்ரீம் கோர்ட்டையும் அணுகி உள்ளோம்.எனவே அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாளை தி.நகரில் கடைஅடைப்பு போராட்டம் நடத்துகிறோம். ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, பாண்டி பஜார், பனகல்பார்க் வியாபாரிகளும் கடையடைப்பில் பங்கேற்கிறார்கள்.

சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருக்கும். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து நாளை ஆலோசனை நடத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது செயலாளர் சுகுமார், பொருளாளர் எம்.ஏ.காசிம் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக