வியாழன், 3 நவம்பர், 2011

அவுஸ்திரேலியாவில் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தொடுத்தவரும் மனைவியும் புலிகள் இயக்க முக்கியஸ்தர்கள்!

னாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுகள் புரிந்ததாக அவுஸ்திரேலியாவில் வழக்குத் தாக்கல் செய்த இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட அருணாசலம் ஜெகதீஸ்வரன் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் சார்பில் இலங்கையில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் புலிகளின் புலனாய்வுப் பிரிவிலும் நீண்ட காலம் பணியாற்றியிருக்கிறார் என்று இப்போது இலங்கை இராணுவத்தின் புலனாய்வு பிரிவு நடத்திய விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
ஜெகதீஸ்வரனின் மனைவி மீனா கிருஷ்ணகுமாரியும் 2002ம் ஆண்டு முதல் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முக்கிய உறுப்பினராக இருந்துள்ளார். இந்தப் பெண் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் ஈழநாடு, தங்கணி என்ற புனைப்பெயருடன் செயற்பட்டதாக புலனாய்வு அறிக்கைகள் கூறுகின்றன. இந்தப் பெண் தற்போது அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழ் ஐக்கிய விடுதலை இளைஞர் சங்கத்தின் தலைவியாக இருந்து வருகிறார்.மீனா கிருஷ்ணமூர்த்தி கனடா, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க நாடுகளுக்கு அடிக்கடி சென்று இவ்வியக்கத்தின் சார்பில் எல்.ரீ.ரீ.ஈக்கான பிரச்சாரப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார் என்று அறிவிக்கப்படுகிறது.

தனக்கு 35 வயது என்று கூறிக்கொள்ளும் மீனா கிருஷ்ணமூர்த்தி 2004ல் இருந்து 2008 வரையில் அவுஸ்திரேலிய பிரஜையாக இலங்கைக்கு அடிக்கடி வந்து கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் எல்.ரீ.ரீ.ஈ. சர்வதேச இணையத்தள வலையமைப்பின் தலைவியாக இருந்து எல்.ரீ.ரீ.ஈ. பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தவர் என்றும் இராணுவ புலனாய்வு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக