வெள்ளி, 11 நவம்பர், 2011

ராசா கோர்ட்டில் அடித்த தடாலடி! நிஜமாக நடந்தது என்ன?

Viruvirupu
New Delhi, India: Prime accused A.Rasa’s application for no cross-examination of witnesses with valid reason was dismissed by the court. This will give him an advantage in the future, if the case turns out as non favorable to him!
தி.மு.க.வின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நிலைமை எப்படியும் இருக்கட்டும், ஸ்பெக்ட்ரம் வழக்கின் 1-ம் நாள் விசாரணையின் முடிவில் சில தமிழ் மீடியாக்களில் அவரைப் பற்றி வெளியான செய்திகளின் நிலைமைதான் ரொம்ப பரிதாபம். ராசா தொடர்பாக இன்று கோர்ட்டில் நடந்தது வேறு, சில ஊடகங்கள் வெளியிட்ட நியூஸ் அதற்கு தலைகீழ்.
“விசார‌ணையில் தன்னை குறுக்கு விசாரணை செய்யக் கூடாது என்று ராசா ஒரு மனு தாக்கல் செய்தார். ராசாவின் மனுவை பாட்டியாலா கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது” என்ற ரீதியில் தமிழில் வெளியாகியுள்ள செய்தியை நீங்கள் பார்த்திருக்கலாம். இன்று கோர்ட்டில் நடந்தது அதுவல்ல.
நிஜமாக நடந்தது என்ன? இதோ இப்படித்தான்:

முதலாவது சாட்சியான ஆனந்த் சுப்ரமணியம் விசாரிக்கப்படுவதற்கு முன்னரே, ஆ.ராசாவின் வக்கீல் ஒரு மனுவை நீதிபதியிடம் கொடுத்தார். “சாட்சிகளை ஆ.ராசா குறுக்கு விசாரணை செய்ய விரும்பவில்லை” என்பதுதான், மனுவில் கூறப்பட்ட விஷயம்! (அதாவது, சில தமிழ் மீடியா செய்திகளில் கூறப்பட்டதற்கு தலைகீழ்!)
குறுக்கு விசாரணை செய்ய விரும்பாத காரணம் என்ன? “ஆரம்பகட்ட விசாரணை முழுமையாக முடியவில்லை. அதற்குள் அவசரப்பட்டு சாட்சிகளை விசாரிக்கிறார்கள்” என்பது ராசாவின் வாதம். இது ஒரு நேர்மையான வாதம்தான்.
“பிரிலிமினரி என்கொயரி முழுமையாக முடிவடையவில்லை என்று சி.பி.ஐ. சொல்கிறது. குற்றப் பத்திரிகைகள் முழுமையாக தாக்கல் செய்யப்பட்டு விட்டனவா என்பதற்கும் அவர்களிடம் சரியான பதில் கிடையாது. ஆரம்பகட்ட விசாரணையில் கூறப்பட்டவை எழுத்து வடிவில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. அப்புறம் நீங்கள் விசாரணை செய்யும் சாட்சிகளை நாம் எப்படி குறுக்கு விசாரணை செய்ய முடியும்?” என்பதே அவரது வாதத்தின் விரிவாக்கம்.
“ஆரம்பகட்ட விசாரணைகள் முடிந்துவிட்டன என்று சி.பி.ஐ. ஒப்புக்கொள்கிறதா? தற்போது பதிவாகியுள்ளவை மட்டும்தான் குற்றச்சாட்டுகளா? இனி புதிதாக யாரையும் குற்றப் பத்திரிகைகளில் சேர்க்க மாட்டார்களா? இந்தக் கேள்விகளுக்கு சி.பி.ஐ. ஆம் என்று பதில் கூறினால், நாமும் இறுதி விசாரணைக்குத் தயார். அப்படி இல்லாவிட்டால் எம்மால் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய முடியாது” என்கிறது ராசாவின் வக்கீல் கொடுத்த மனு.
விசாரணை இன்று ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சாட்சிகளும் கோர்ட்டுக்கு வந்துவிட்ட நிலையில், இந்த மனுவை தள்ளுபடி செய்தது கோர்ட். நடந்தது அதுதான்!
சரி, சாட்சிகளை இவர் குறுக்கு விசாரணை செய்தால் என்ன? செய்யாவிட்டால் என்ன?
அதில் ஒரு சட்டச் சிக்கல் உள்ளது. சாட்சிகளை விசாரிக்கும்போது அவர்கள் கூறுவதை குறுக்கு விசாரணை செய்யும் உரிமை குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்கிறது இந்திய குற்றவியல் சட்டம். குறிப்பிட்ட சாட்சியை குறுக்கு விசாரணை செய்வதற்கு தம்மிடம் கேள்விகள் ஏதும் கிடையாது என்று குற்றம் சாட்டப்பட்டவர் சொல்லிவிட்டால் சிக்கல் கிடையாது. அடுத்த சாட்சியிடம் சென்று விடலாம்.
ஆனால், ஏன் குறுக்கு விசாரணை செய்யவில்லை என்பதற்கு இப்படி ஒரு காரணம் கூறப்பட்டு பதிவு செய்யப்பட்டால், அதை வைத்து அப்பீல் செய்யலாம். அப்பீலில் முடிவு சாதகமாக வந்தால், சாட்சிகள் மீண்டும் சாட்சியம் கூறவேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இப்போது புரிகிறதா நிலைமையில் தீவிரம்?
இந்த விஷயத்தில் ராசா தரப்பு வாதத்தில் நிச்சயம் ஒரு சாதகமான பாயின்ட் உள்ளது. வழக்கில் ராசாவுக்கு பாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டால், என்னாகும்? இப்போதே சொல்கிறோம், எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இந்த பாயின்டை பிற்பாடு தகுந்த நேரத்தில் உபயோகிப்பார்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக