புதன், 2 நவம்பர், 2011

பெங்களூரில் `வேலாயுதம்' பட தியேட்டர் முற்றுகை-பேனர்கள் கிழிப்பு: ரசிகர்களை வெளியேற்றியதால் காட்சிகள் ரத்து

Velautham - 1கன்னட ரக்ஷண வேதிகே போராட்டம்:
பெங்களூரில் `வேலாயுதம்' படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டரை கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பினர் திடீரென்று முற்றுகையிட்டு ரகளையில் ஈடுபட்டனர். அதோடு நடிகர் விஜயின் பேனர்களை கிழித்து எறிந்தனர். ரசிகர்களை வெளியேற்றியதால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.நடிகர் விஜய் நடித்த `வேலாயுதம்' படம், தீபாவளி அன்று திரைக்கு வந்தது. இந்த படம் பெங்களூர் ஆர்.டி.நகரில் உள்ள ராதாகிருஷ்ணா தியேட்டர் உள்பட பல்வேறு தியேட்டர்களில் திரையிடப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், பிரவீண்ஷெட்டி தலைமையிலான கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பினர் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று திடீரென்று "வேலாயுதம்" படம் திரையிட்டுள்ள ராதாகிருஷ்ணா தியேட்டரை முற்றுகையிட்டனர். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த நடிகர் விஜயின் பேனர்களை கிழித்து எறிந்தனர். மேலும், இன்று (அதாவது நேற்று) கர்நாடக ராஜ்யோத்சவா தினத்தையொட்டி தமிழ் உள்பட மாற்று மொழி படங்களை திரையிடக்கூடாது என்றும், எனவே காட்சிகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் மிரட்டினர். அதோடு தியேட்டரில் இருந்து ரசிகர்களை வெளியேற்றினர். இதையடுத்து நேற்று அந்த தியேட்டரில் வேலாயுத பட காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் சினிமா பார்க்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.இதுகுறித்து பிரவீண்ஷெட்டி கூறும்போது, "கர்நாடகத்தில் ராஜ்யோத்சவா விழாவை ஒரு மாதம் கொண்டாட நாங்கள் முடிவு செய்துள்ளோம். அதுவரை பெங்களூரில் உள்ள தியேட்டர்களில் கன்னட படங்களை மட்டுமே திரையிட வேண்டும். தமிழ் உள்பட வேறு எந்த மொழி படங்களையும் திரையிடக்கூடாது. இதுகுறித்து கன்னட சினிமா வர்த்தக சபை மற்றும் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளோம்'' என்றார். இந்த சம்பவத்தால் பெங்களூரில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக