வெள்ளி, 11 நவம்பர், 2011

கிங்ஃபிஷர் (பீர்) அடிக்காமலேயே தள்ளாடும் கிங்ஃபிஷர் (ஏர்லைன்ஸ்)

ViruvirupuBangalore, India: Vijay Mallya-owned carrier Kingfisher Airlines is in real mess! Effective today, 100 pilots quit the company. Cancellation of 80 flights in the past two days left thousands of passengers stranded at airports!
தமது வியாபாரத்தில் இதுவரை கண்டிராத தள்ளாட்டத்தைச் சந்தித்திருக்கிறது கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ். நிறுவனத்தின் 100 பைலட்டுகள் இன்று (வியாழக்கிழமை) திடீரென ராஜினாமா செய்து, நிர்வாகத்தை அதிர வைத்திருக்கின்றனர். தமது அக்டோபர் மாத ஊதியம் இன்னமும் வழங்கப்படவில்லை என்கிறார்கள் அவர்கள்!
இவர்களது ராஜினாமா கடிதங்கள் கொடுக்கப்படுவதற்கு முன்னரே, கிங“ஃபிஷரின் தள்ளாட்டம் தொடங்கிவிட்டது. கடந்த இரு தினங்களாக கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் சுமார் 80 விமான ரூட்களை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கேன்ஸல் பண்ணி, ஆயிரக் கணக்கான பயணிகளை திணற வைத்தார்கள்.

கோபம் கொண்ட பயணிகள் விமான நிலையங்களில் கலாட்டாக்களில் ஈடுபடவே, DGCA எனப்படும் சிவில் விமானப் பயணிகளுக்கான அமைப்பு இதில் தலையிட்டுள்ளது. “இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் விமானங்கள் ரத்து செய்யப்பட்ட காரணம் என்ன? பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு என்ன பதில் கூறப்போகின்றீர்கள்? அவர்களது பயணத்துக்கு என்ன மாற்று ஏற்பாடுகளை செய்து கொடுக்கிறீர்கள்? ஆகிய கேள்விகளுக்கு உடனடியாக பதில் கொடுக்கவும்” என்று டிமான்ட் பண்ணியுள்ளது DGCA.
கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸின் தலைவர் விஜய் மல்லையா, “நஷ்டத்தின் அளவைக் குறைப்பதற்காகவே சில விமான ரூட்களை கேன்சல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது” என்று கூறியுள்ளார். ஆனால், காரணம் அது மட்டுமல்ல என்றே தெரிய வருகின்றது.
இவர்கள் வெளிப்படையாகத் தெரிவிக்காத காரணங்களில் ஒன்று, விமானங்களுக்கு எரிபொருள் வழங்கும் 3 ஆயில் நிறுவனங்கள் (HPCL, IOC மற்றும் BPCL) கிங்ஃபிஷருக்கு கடனுக்கு எரிபொருள் வழங்க மறுத்து விட்டன. இந்த மூன்று ஆயில் நிறுவனங்களிடமும் முன்பு எரிபொருள் வாங்கிய பாக்கித் தொகை 200 கோடி ருபா நிலுவையில் உள்ளது.
அதைக் கொடுத்தால்தான் மேலும் கடன் வழங்க முடியும் என்கின்றன ஆயில் நிறுவனங்கள்.
பழைய கடன் பாக்கி அடைக்கப்படும்வரை, கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸை இந்த ஆயில் நிறுவனங்கள் cash-and-carry payment முறைக்கு மாற்றியுள்ளன. அதாவது எந்த விமான நிலையத்திலும் கையில் ரெடி கேஷ் கொடுத்தே விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப முடியும். ஒவ்வொரு விமான நிலையத்திலும் அவ்வளவு தொகை பணம் வைத்திருப்பது சாத்தியமல்ல.
இதனால், பல விமான ரூட்கள் கேன்சல் செய்யப்பட்டன.
இதற்கு ஒரு வழி காணுவதற்கு முன்னர், 100 விமானிகள் மொத்தமாக ராஜினாமா செய்துவிட்டு வெளியேறியுள்ளனர். மீதமுள்ளவர்களும் எந்த நிமிடத்தில் குட்பாய் சொல்வார்கள் என்பது நிச்சயமில்லை. 2010-11 காலப்பகுதியில் கிங்ஃபிஷர் இதுவரை 1027 கோடி ரூபா நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.
நிறுவனத்துக்கு உள்ள மொத்த கடன், 7057 கோடி ரூபா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக