வெள்ளி, 4 நவம்பர், 2011

வடிவேலு போல குஷ்புவையும் திமுகவினர் சக்கையா புழிஞ்சு தூக்கிப்போட்ருவாங்க: ராதாரவி

வேலூர்: திமுகவினர் சக்கையாய் பிழிந்துவிட்டு வெளியே தள்ளிவிடுவார்கள் என்று அதிமுக தலைமை கழக பேச்சாளரும், நடிகருமான ராதாரவி நடிகை குஷ்புவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர் நகர அதிமுக சார்பில் 40வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் அண்ணா கலையரங்கம் அருகே நடந்தது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைமை கழக பேச்சாளரும், நடிகருமான ராதாரவி பேசியதாவது, அதிமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறது. இதனைத் தான் பழிவாங்கும் செயல் என்று கூறுகிறார்கள். திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகக் கட்டிடப் பணிகள் முழுமையாக முடியவில்லை. அதனால் தான் கோட்டையில் தலைமைச் செயலகம் செயல்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

நான் துவக்கத்திலேயே நடிகர் வடிவேலுவை எச்சரித்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை. திமுகவினர் கைவி்ட்டுவிட்டார்கள். தற்போது அவர் படம் இல்லாமல் திண்டாடுகிறார். நடிகை குஷ்புவை எச்சரிக்கிறேன். திமுகவினர் சக்கையாய் பிழிந்துவி்ட்டு தூக்கி எறிந்துவிடுவார்கள். நலத்திட்டங்கள் தொடர மக்கள் அதிமுக அரசுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக