மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை த தர் டி பிக்சர் என்ற பெயரில் படமாகிறது. சில்க்கின் குழந்தை பருவம், சினிமா பிரவேசம், காதல், தற்கொலை என அனைத்தும் இதில் காட்சிபடுத்தப்படுகிறது. இப்படத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் இந்தி நடிகை வித்யாபாலன் நடிக்கிறார்.
இதற்காக சில்க் நடித்த படங்களை பார்த்தும், அவருக்கு நெருக்கமானவர்களிடம் பழகியும் நிறைய பயிற்சி எடுத்தார். வித்யாபாலன் அளித்த பேட்டி வருமாறு:
சில்க் ஸ்மிதா துணிச்சலான நடிகை. எதைக்கண்டும் பயப்படமாட்டார். எப்படி நடிக்க வேண்டும் என்று நினைத்தாரோ அப்படி நடித்தார். அதற்காக அவர் வெட்கப்பட்டது இல்லை. எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். வாழ்க்கையை முழுமையாக வாழ ஆசைப்பட்டார். ஒவ்வொரு படத்தையும், வாய்ப்புகளையும் சந்தோஷமாக பயன்படுத்தினார்.
அவர் வாழ்க்கை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அவர் சிந்தித்தது இல்லை. அதனை பொருட்படுத்தவும் இல்லை. சில்க் உடுத்திய ஆடைகளை பார்த்து அவர் துணிச்சலானவர் என்று மக்கள் கருதினர். அது ஒன்று மட்டும் காரணம் அல்ல. செக்ஸ் விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தார். ஆனால் அவரை சிலர் தவறாக புரிந்து கொண்டனர். சில்க் ஸ்மிதாவை தவறாகவும் அவர்கள் பயன்படுத்தினர்.
சில்க் ஸ்மிதா கதைகளை முழுமையாக படமாக்கவில்லை. அவர் வாழ்க்கையில் சில பகுதிகளைதான் கொண்டு வந்துள்ளோம். இவ்வாறு வித்யாபாலன் கூறினார்.

பி.ஐ.ஏ
பதிலளிநீக்கு