வெள்ளி, 4 நவம்பர், 2011

புலிகளின் சொத்துக்களை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க!

புலிகளின் சொத்துக்களை சுவீகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகின் பல பகுதிகளிலும் காணப்படும் புலிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து அவற்றை பயன்படுத்திக் கொள்ளக் கூடிய புதிய சட்டங்களை அரசாங்கம் உடனடியாக அமுல்படுத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள வர்த்தகர்களை ஒடுக்குமுறைக்கு உட்படுத்துவதனை விடுத்து புலிகளின் சொத்துக்களை பறிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.ஐக்கிய இலங்கை மகளிர் முன்னணியினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட போது ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் புலிகளினால் அழிவுகளை எதிர்நோக்கியவர்களுக்கு புலிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் புலிகளின் சொத்துக்களைப் பயன்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குமரன் பத்மநாதனின் சொத்துக்களின் பெறுமதி மட்டும் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்கள் கப்பல்கள் என பல்வேறுபட்ட சொத்துக்கள் புலிகளுக்கு சொந்தமாகக் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக