புதன், 16 நவம்பர், 2011

இம்ரான் கான்:நான் பிரதமரானால் ராணுவம் என் கையில்

இஸ்லாமாபாத்: நான் பாகிஸ்தானின் பிரதமரானால் ராணுவத் தளபதி அஷ்பாக் பர்வேஸ் கயானி என் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுவார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்டில் கொடிகட்டிப் பறந்த பாகிஸ்தான் வீரர் இம்ரான் கான் தற்போது பிரதமர் பதவிக்கு அடிபோடுகிறார். நான் மட்டும் பாகிஸ்தான் பிரதமரானால் ராணுவமும், ஐஎஸ்ஐ உளவு அமைப்பும் என் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்று ராணுவம் என்று பெயரிடப்பட்ட வீடியோ ஒன்றில் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
என்னை யாரும், எப்பொழுதுமே கட்டுப்படுத்தியதில்லை என்று அவர் கூறியதாக எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமரானால் ராணுவத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, ஐஎஸ்ஐ அமைப்பை தன் நேரடி கண்காணிப்பில் வைத்துக் கொள்ள இம்ரான் கான் திட்டமிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக