ஞாயிறு, 27 நவம்பர், 2011

இலங்கை: தெற்கு அதிவேக நெடுஞ்சாலை திறப்பு

கொழும்பு, நவ.27: இலங்கையின் முதலாவது நெடுஞ்சாலையான தெற்கு அதிவேக நெடுஞ்சாலை அதிபர் மஹிந்த ராஜபட்சவினால் இன்று அதிகாரப்பூர்வமாக றந்துவைக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் ஜப்பானிய சமாதானத் தூதுவர் யசூசி அகாசி கலந்துகொண்டார்.மேலும் வெளிநாட்டு தூதுவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் உட்பட அதிக எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர். நாட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தெற்கு அதிவேக சாலையானது கொழும்பு கொட்டாவையிலிருந்து காலி பின்னதுவ வரை 152 கிலோமீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது.இந்த நெடுஞ்சாலையில் கட்டணம் செலுத்தியே பயணிக்க முடியும். இந்த நெடுஞ்சாலையில் பயணிப்பதற்கு மூன்று சக்கர வண்டி-மோட்டார் சைக்கிள்- உழவு இயந்திரம்- சைக்கிள்கள் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதசாரிகளும் இந்த சாலையில் செல்ல முடியாது.நாட்டில் முதல் தடவையாகவே இவ்வாறான அதிவேக சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் மணி்க்கு 120 கிலோ மீட்டர் வரையான வேகத்தில் பயணிக்க முடியும்.இந்த சாலையில் பயணிப்பதற்காக 8 இடங்களில் மட்டுமே நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களிலிருந்து பயணிக்கும் தூரங்களுக்கான கட்டணங்கள் நான்கு வகையாக அறவிடப்படவுள்ளன.இந்த சாலைகளில் பொது மக்கள் நுழையாத வகையில் சாலையின் இரண்டு பக்கமும் வேலிகள் போடப்பட்டுள்ளதுடன் சாலை தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக