புதன், 9 நவம்பர், 2011

நடிகை சினேகா - நடிகர் பிரசன்னா திருமணம்


நடிகை சினேகாவுக்கும், நடிகர் பிரசன்னாவுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடக்கிறது. இதனை நடிகர் பிரசன்னாவே இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
விரும்புகிறேன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சினேகா. பைவ் ஸ்டார் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பிரசன்னா.ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே படத்தின் படப்பிடிப்பில் நடிகர் ஷாம், சினேகாவின் உதட்டை கடித்துவிட்டதாக சர்ச்சை எழுந்தது. அதே ஷாமுடன் சினேகா இணைத்து கிசுகிசுக்கப்பட்டார்.

பின்னர் சினேகா, நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைத்து பேசப்பட்டார்.இவர்கள் கல்யாணம் செய்துகொள்ளப் போவதாகவும் செய்திகள் வந்தன.
சிங்கப்பூர் தொழிலதிபர் நாக்ரவி, பெங்களூர் தொழிலதிபர் ராகவேந்திரா இருவரும்,  சினேகா தங்களை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்துவிட்டு ஏமாற்றி விட்டதாக சர்ச்சையை கிளப்பினர்.
இதையெல்லாம் பொய் என்று மறுத்துவந்த சினேகா, பிரசன்னாவை கைப்பிடிக்கிறார்.
நடிகர் பிரசன்னாவும் சினேகாவும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்து நடித்தனர். அதன் பிறகு இருவரும் நண்பர்களாகத் திகழ்ந்தனர்.


இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.  இருவரும் இதுகுறித்து மறுப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இருவீட்டாரின் சம்மதத்துடன் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளது.
இது குறித்து நடிகர் பிரசன்னா,சினேகாவுக்கும் எனக்கும் திருமணம் நடைபெறுகிறது. எங்கள் இருவரின் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் எப்போது என்பதை விரைவில் நாங்களே அறிவிக்கிறோம்’’ என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக