ஞாயிறு, 27 நவம்பர், 2011

பழங்குடி பெண்களை கற்பழித்த போலீசார் மீண்டும் ஒரு வாச்சாத்தி


3 மாத கர்ப்பிணி என்று கூறி என்னை விட்டுவிடுங்கள் என கெஞ்சினேன். என் வாயை பொத்தி என்னை பலாத்காரம் செய்தார். இதேபோல் மற்ற மூன்று பேரையும் பலாத்காரம் செய்தனர். ஒரு பெண்ணை 3 பேர் மாறிமாறி பலாத்காரம் செய்தனர்.
 VILLUPURAM: Four cops allegedly raped four girls in a grove near Thirukovilur in Villupuram district on November 22. Victims Rani (18), Maheshwari (20), Ratimeena (17) and Vinodini (20) of a single family belonging to the Irula community lodged a complaint with Superintendent of Police, N Bhaskaran on Saturday.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தி.மண்டபம் பெருமாள் கோவில் மண்டபப்படியைச் சேர்ந்தவர் காசி. இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி விழுப்புரம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் கூடுதல் எஸ்பி பெருமாளை சந்தித்து நேற்று கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
எங்கள் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் 3 போலீசார் கடந்த 22ம் தேதி வந்தனர். என் கணவர் காசியை அழைத்து சென்றனர். வீட்டில் இருந்து என்னையும், அண்ணி நாத்தனார்கள் கணவரின் தம்பிகள் படையப்பா(12), மாணிக்கம்(10), ரெங்கநாதன் (8), சின்ன மாமனார் குமார் (45) ஆகிய 9 பேரையும் வேனில் ஏற்றிக்கொண்டு சென்றனர். 4 போலீசார் எங்களோடு வந்தனர். எங்களை ஊரை கடந்து உள்ள தைலமரம் தோப்பிற்கு அழைத்து சென்றனர். அப்போது என்னையும், மற்ற மூன்று பெண்களையும் வேனில் இருந்து கீழே இறக்கினர். ஆளுக்கு ஒருவர் என எங்களை 4 போலீ சாரும் தனித்தனியே மறைவான இடத்திற்கு இழுத்து சென்றனர்.
3 மாத கர்ப்பிணி என்று கூறி என்னை விட்டுவிடுங்கள் என கெஞ்சினேன். என் வாயை பொத்தி என்னை பலாத்காரம் செய்தார். இதேபோல் மற்ற மூன்று பேரையும் பலாத்காரம் செய்தனர். ஒரு பெண்ணை 3 பேர் மாறிமாறி பலாத்காரம் செய்தனர். எங்கள் 4 பேரையும் வேனில் மீண்டும் ஏற்றி மறுநாள்(23ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு எங்களை வீட்டில் இறக்கிவிட்டு சென்றனர்.என் கணவர் காசி, மாமனார் முருகன், சின்னமாமனார் குமார், உறவினர் குமார், வெள்ளிக்கண்ணு, ஏழுமலை ஆகிய 6 பேரையும் போலீஸ் வேனில் ஏற்றி விழுப்புரம் கொண்டு சென்றுவிட்டனர்.எங்களை கற்பழித்த 4 போலீசார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக