ஞாயிறு, 27 நவம்பர், 2011

கள் இறக்க அனுமதிக்காவிட்டால் போராட்டம்:


தமிழ்நாடு பனை மற்றும் தென்னை மர தொழிலாளர்கள் நலச்சங்கம்

பனை மரம் ஏறவும் கள் இறக்கவும் அனுமதி வழங்காவிட்டால் 15 லட்சம் தொழிலாளர் குடும்பங்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று தமிழ்நாடு பனை மற்றும் தென்னை மர தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் எம்.என்.ராஜா கூறினார்.
சென்னை அடையாறு சங்க அலுவலகத்தில் அவர் அளித்த பேட்டியில்
கள் இறக்குவதை தடுப்பதைவிட கள்ளில் கலப்படம் இருப்பதை தடுக்கலாம். பனை மரத்தில் வேர் முதல் நுனிவரை மருத்துவ குணம் உள்ளது.
பனை  பொருள் குறித்து ஆராய்ச்சி செய்ய தனி மையம் அமைக்க வேண்டும். பனை தொழில் விவசாய தொழில் போன் றது. இதை மக்களும் அரசும் ஏற்றுக்கொள்ள வேண்டும். கள் வேண்டுமா, வேண்டாமா என மக்களிடம் கருத்து கேட்டு கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும். மரம் ஏறும் தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி, தொழிற்கடன், அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி கடன், வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
எனவே, மரம் ஏறவும் கள் இறக்கவும் அரசு அனுமதி அளிக்க வேண்டும். எங்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் 15 லட்சம் பனை தொழிலாளர் குடும்பங்களை ஒன்று திரட்டி மறியல் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக