புதன், 2 நவம்பர், 2011

போயஸ் கார்டனுக்கே காட்டிய, கில்லாடிக்கு கில்லாடியின் கில்லி வேலை!


Viruvirupuபெங்களூரு, இந்தியா: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக பெங்களூருவில் நடைபெற்ற கோர்ட் விவகாரங்கள் மீடியாக்களில் சக்கைபோடு போட்டுவிட்டன. ஆனால், கோர்ட்டுக்கு வெளியே நடைபெற்ற சில முன்னேற்பாடுகள் அதி ரகசியமானவை. இப்போதுதான் லேசாகக் கசிகின்றன அவை.
ஜெயலலிதா என்னதான் தமிழகத்துக்கு முதல்வராக இருந்தாலும், வழக்கு நடப்பது மற்றொரு மாநிலத்தில். அங்குள்ள அரசு வேறு, இவர்களுக்கு நெருக்கமானது அல்ல.  இதையெல்லாம் மனதில் வைத்து, பெங்களூரு ‘மேட்டர்களை’ கவனிக்க சென்னையில் இருந்து ஒரு டீம் போய் அங்கே இறங்கியது.
மூன்று மாதங்களுக்குமுன் இந்த வழக்கு விவகாரம் அடிபடத் தொங்கியபோதே கோர்ட் விவகாரத்தைக் கவனிப்பதற்காக முதல்வரின் சார்பில் இந்த டீம் பெங்களூருவுக்கு போய் இறங்கியது. டிக்கின்சன் ரோடிலுள்ள ரோயல் ஆர்க்கிட் சென்ட்ரல் ஹோட்டல்தான் இவர்களது ஆபரேஷன் சென்டராக இருந்தது. இந்த டீம் தங்கியிருந்து, சந்திக்க வேண்டியவர்களைச் சந்தித்து வந்ததும் அதே ஹோட்டலில் வைத்துதான்.

இந்த ஹோட்டல் டீம் பற்றி ஏற்கனவே விறுவிறுப்பு.காம் “தமிழக அரசின் ரகசிய கடிதம், லீக்! ரோயல் ஆர்க்கிட் ஹோட்டல் வரை!!” என்ற தலைப்பில் எழுதியிருந்தது. அதையும் ஒருமுறை படித்து வைத்துக் கொள்ளுங்கள்.
மூன்று மாதங்களாக இவர்கள் அங்கே என்ன செய்தார்கள் என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். ஆனால், கடந்த 20ம் தேதி முதல்வர் பெங்களூருவுக்கு செல்வதற்குமுன், “இங்கே மேலிடத்தில் எல்லா ஏற்பாடுகளும் ஓகே. நீங்கள் புறப்பட்டு வரலாம்” என்று சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால், மேலிடத்தில் அப்படி எந்த டீலும் இருக்கவி்ல்லை என்பதை முதல்வர் விசாரணைக்காக 20ம் தேதி சென்றபோதே புரிந்து கொண்டார். கோர்ட் நடவடிக்கைகளும், மாநில அரசின் பிகேவியரும் முதல்வர் நினைத்ததற்கு (அல்லது முதல்வருக்கு ரோயல் ஆர்க்கிட் சென்ட்ரல் ஹோட்டல் டீமால் சொல்லப்பட்டதற்கு) தலைகீழாக இருந்திருக்கின்றன! விசாரணைக்காகச் சென்ற 2வது நாள், நிலைமை முதல் நாளைவிட மோசமாக இருந்ததாம்.
இப்போது, ஹோட்டல் டீம் அங்கிருந்து என்னதான் செய்தார்கள் என்று ‘உள்வட்ட’ விசாரணை நடக்கிறது.
டீம் கணக்கு காட்டி தொகை, பெரிய தொகை என்று தெரியவருகின்றது. ‘மாநிலத்திலுள்ள மத்திய அரசின் பெரிய பிரதிநிதி’யின் அனுக்கிரகத்தைப் பெறுகிறோம் என்று சொல்லிக்கொண்டு, மத்திய பிரதேஷ் மாநிலத்துக்குப் போய் செலவு பண்ணியதாக ஒரு கணக்கு.
அதுவாவது பரவாயில்லை. அந்த மாநில ‘மூலவரின்’ குடும்பத்தவர் ஒருவருடன் டீல் பண்ண என்று நியூகாஸ்ட்டில் (பிரிட்டிஷ் வடகிழக்கு) நகரம்வரை போன கணக்குதான், சென்னையையே கிறுகிறுகக வைத்திருக்கிறதாம். கில்லாடிக்கே கில்லாடி கில்லி வேலை அது என்கிறார்கள்!
டைன் நதியின் வடக்கு கரையோரமாக மூலவரின் குடும்பம் வசிப்பது நிஜமான தகவல்தான். இவர்கள் அங்கே சென்று என்ன செய்தார்கள் என்பதுதான் தெரியவில்லை. எப்படியோ, கார்டனின் கோபப் பார்வையில் டீம் புள்ளி ஒருவர் வசமாகச் சிக்கியுள்ளார். வசமாக என்றால், மிக மிக வசமாக!
சார் பேசாமல், மகள் ஸ்டூடென்ட் விசாவில் படிக்கும் நாட்டுக்கே போய், சிறிது காலம் இருந்துவிட்டு வரலாமே! “ஒன்னு கிடக்க ஒன்னு ஆயிடப் போறது சார்”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக