புதன், 2 நவம்பர், 2011

அறக்கட்டளை உறுப்பினரை தாக்கியதாக வேல்ஸ் பல்கலை. வேந்தர் ஐசரி கணேஷ் கைது

சென்னை: சென்னை பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளை உறுப்பினரைத் தாக்கிய வழக்கில் அதன் தலைவர் ஐசரி கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மறைந்த அதிமுக நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ஐசரி வேலனின் மகன்தான் கணேஷ். இவர் தனது தந்தை நினைவாக வேல்ஸ் பல்கலைக்கழகத்தை நிறுவி நடத்தி வருகிறார். அதன் வேந்தராகவும் உள்ளார். பல்லாவரத்தில் இந்தப் பல்கலைக்கழகம் உள்ளது.
பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளைத் தலைவராக கடந்த திமுக ஆட்சிக்காலத்தின் போது நடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார் கணேஷ். இந்த நிலையில் அறக்கட்டளை உறுப்பினர் ஒருவரைத் தாக்கியதாக அவர் மீ்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது. இதையடுத்து போலீஸார் இன்று கணேஷை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக