வியாழன், 24 நவம்பர், 2011

BJP Ex மத்திய அமைச்சர் அருண்ஷோரி கைது ஆகிறார்

2ஜி ஒதுக்கீட்டில் ரூ.508 கோடி இழப்பு:
பா.ஜ.க. முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஷோரி கைது ஆகிறார்
ஊழல் ஒழிப்பு வேடதாரிகளின் இலட்சணம்!
 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக இதுவரை 14 பேர் கைதாகி உள்ள னர். அவர்கள் மீதான வழக்கு விசாரணை சி.பி.அய். நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அதிக  இழப்பீடு ஏற் படுத்தியவர்கள் மீது இன்னும் சி.பி.அய். நடவடிக்கை எடுக்க வில்லை. விரைவில் அதற்கான  விசா ரணை தொடங்க உள்ளது.
இந்த நிலையில் பா.ஜ.க. ஆட்சி யின்போது நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிலும் இழப்பு ஏற்பட்டுள் ளதை சி.பி.அய். கண்டுபிடித்துள் ளது. 2001 முதல் 2007 ஆம் ஆண்டு வரை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த விதிமீறல்கள் காரணமாக ரூ.508 கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. 
பா.ஜ.க. ஆட்சி யின்போது தொலைத் தொடர்புத் துறை செயலாளராக இருந்தவர். மற்றும்  பி.எஸ்.என்.எல். இயக்குநர் மீது சி.பி.அய். வழக்குப்பதிவு செய் துள்ளது.
ஏர்டெல், வோடாஃபோன் நிறுவனங்களும் விசாரணை வளை யத்துக்குள் கொண்டுவரப்பட்டுள் ளன. இதற்கிடையே  சி.பி.அய். அதி காரிகளின் பார்வை பா.ஜ.க. முன் னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி மீது திரும்பியுள்ளது.  இவர் 2003 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2004 ஆம் ஆண்டு மே மாதம் வரை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக பதவி வகித்தார்.  அருண்ஷோரி  கடந்த பிப்ரவரி மாதமே சி.பி.அய். அதிகாரிகள் முன்பு ஆஜராகி ஸ்பெக்ட்ரம் ஒதுக் கீடு செய்யப்பட்டது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
நேற்று அவர் மீண்டும் சி.பி.அய். முன்பு ஆஜராகி விளக்கம் அளித் தார். அவர் மீது சி.பி.அய். வழக்குப் பதிவு செய்யும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.  இதுகுறித்து சி.பி.அய். அதிகாரி ஒருவர்   கூறுகை யில், இன்னும் சிலர் மீது வழக்குகள் பதிவு செய்ய தீர்மானித்துள்ளோம்'' என்றார். அதன் தொடர்ச்சியாக அருண்ஷோரி கைது செய்யப்பட லாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அருண்ஷோரி அமைச்ச ராக இருந்தபோது மத்திய தொலைத் தொடர்புத்துறை செயலாளராக வினோத் வைஸ் பணியாற்றினார். அவரிடமும் விசாரணை நடத்த சி.பி.அய். திட்டமிட்டுள்ளது.  சி.பி.அய்.யின் இந்த தீவிரம் குறித்து அருண்ஷோரி கூறியதா வது:-  மத்திய  தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது நான் எந்தத் தவறும் செய்யவில்லை. வடகிழக்கு, பிகார், கிழக்கு உத்தர பிரதேசம, காஷ்மீர் மாநிலங்களில் மொபைல் சேவையை தீவிரப்படுத்த பா.ஜ.க. திட்டமிட்டது. அதை பா.ஜ.க. செய்து காட்டியது.  - இவ்வாறு அருண்ஷோரி  கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக