செவ்வாய், 22 நவம்பர், 2011

மதுரை 81 வயது முதியவருக்கு இரட்டை குழந்தை

முதியவருக்கு டெஸ்ட் டியூப் முறை மூலம் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா வெங்கலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்சாமி(81). இவரது முதல் மனைவிக்கு குழந்தை இல்லை. இதனால் 2வதாக ரத்தினம்(46) என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு திருணமான 5 ஆண்டுக்குப்பின் ஆண் குழந்தை பிறந்தது. 23 வயதடைந்த இவர்களது மகன் சுருளி மோகன், கடந்த 2008ம் ஆண்டு நடந்த விபத்தில் இறந்து விட்டார்.
வாரிசாக இருந்த ஒரு மகனும் இறந்ததால் மீண்டும் குழந்தை பேறுக்கு முயற்சித்தனர்.
இவர்கள் இருவருக்கும் ‘இக்சி‘(சோதனைக்குழாய்) முறையில், சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 2011 மார்ச்சில்  பெருமாள்சாமி உயிரணுக்களை எடுத்து, ரத்தினத்துக்கு கருவூட்டப்பட்டது. ஏப்ரல் 5ம் தேதி ரத்தப் பரிசோதனையும், 21ம் தேதி ஸ்கேன் பரிசோதனையும் செய்ததில் கருவுற்றது உறுதிப்படுத்தப்பட்டது.

வயது மற்றும் ரத்தக்கொதிப்பு காரணமாக ரத்தினத்துக்கு சிறப்பு மகப்பேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. கடந்த 16ம் தேதி ரத்தினம் இரட்டை ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.
இது குறித்து பழநி பாலாஜி கருத்தரித்தல் மைய டாக்டர் செந்தாமரைச்செல்வி கூறியதாவது: குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு செயற்கை முறையில் கருத்தரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. திசுக்குடல் பாதிப்பு, மன அழுத்தம், தவறான உணவுப்பழக்கம், புகை, போதை காரணமாக ஆண்களுக்கு மலட்டுத்தன்மை அதிகரித்து வருகிறது.

இரவில் நேரம் தவறி உணவு உட்கொள்வது, பாலியல் உணர்வை பாழ்படுத்தும். பெண்கள் அதிக மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்படுகின்றனர். ஆண்களுக்கு எத்தனை வயதானாலும் அவர்களது உடலில் உயிரணு உற்பத்தி இருக்கும். எனவே, குழந்தை இல்லாத தம்பதிகள் செயற்கை முறை கருத்தரித்தல் மூலம் குழந்தை பெறலாம்.
இவ்வாறு செந்தாமரை செல்வி கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக