சனி, 12 நவம்பர், 2011

கட்டண கொள்ளை... 6 தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து!

1. அண்ணா ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் பள்ளி
2. கில் ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் பள்ளி
3. அழகப்பா மெட்ரிகுலேஷன் பள்ளி
4. லயோலா மெட்ரிகுலேஷன் பள்ளி
5. ஹோலி ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளி
6. ஹோலி ஃபேமிலி மெட்ரிகுலேஷன் பள்ளி.
சென்னை: பெற்றோரிடம் கூடுதலாக கட்டணம் வசூலித்து துன்புறுத்திய 6 பெரிய தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை அங்கீகாரத்தை ரத்து செய்து நீதிபதி சிங்காரவேலு உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் தாறுமாறாக கல்வி கட்டணம் வசூலிப்பதாக தமிழக அரசுக்கு புகார் வந்த வண்ணம் உள்ளது. இதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கட்டணத்தை நிர்ணயிக்க கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி பள்ளிகளுக்கு கட்டணத்தை நிர்ணயம் செய்து அறிவித்தது.
பின்னர், நீதிபதி கோவிந்தராஜன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி ரவிராஜபாண்டியன் நியமிக்கப்பட்டு, அவரும் புதிதாக கல்வி கட்டணத்தை நிர்ணயித்தார்.
பின்னர் இதுவரை கட்டணம் நிர்ணயிக்காத பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி இதுவரை கல்வி கட்டணம் நிர்ணயிக்காத பள்ளிகளுக்கு கட்டணத்தை நிர்ணயிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், பல பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் கூடுதலாக கல்வி கட்டணம் வசூலிப்பதாக கூறியும், 'ஸ்மார்ட் கிளாஸஸ்' நடப்பதாக கூறி கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார் தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில் அந்த பெற்றோர்களையும், பள்ளிகளின் நிர்வாகத்தினரையும், நீதிபதி சிங்காரவேலு அழைத்து விசாரணை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து நேற்று நீதிபதி சிங்காரவேலு, நிருபர்களிடம் கூறுகையில், "தமிழ்நாட்டில் கூடுதல் கல்வி கட்டணம் வசூலிப்பதாக 400 பள்ளிக்கூடங்கள் மீது புகார்கள் வந்துள்ளன. அவற்றில், 40 பள்ளிகள் மீது விசாரணை நடந்துள்ளது. ஏற்கனவே கட்டணம் நிர்ணயிக்காத பள்ளிகளுக்கு கட்டணத்தை நிர்ணயித்து வருகிறோம். இருப்பினும் புகார்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விசாரணை நடத்தியதில், 6 பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸஸ்' என்று கூறி கூடுதல் கட்டணம் வசூலித்து வந்தனர்.

அவ்வாறு வசூலிக்கக்கூடாது என்று அந்த பள்ளிகளுக்கு அறிவுரை கூறியும், தொடர்ந்து எங்கள் உத்தரவை மதிக்காமல் கூடுதல் கல்வி கட்டணம் வசூலித்து வந்துள்ளனர். எனவே, 6 பள்ளிக்கூடங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

அந்த பள்ளிக்கூடங்களின் பெயர் விவரம் வருமாறு:

1. அண்ணா ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் பள்ளி
2. கில் ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் பள்ளி
3. அழகப்பா மெட்ரிகுலேஷன் பள்ளி
4. லயோலா மெட்ரிகுலேஷன் பள்ளி
5. ஹோலி ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளி
6. ஹோலி ஃபேமிலி மெட்ரிகுலேஷன் பள்ளி.

அனைத்துப் பள்ளிகளுமே சென்னையில் உள்ளவை. மேலும், கூடுதலாக வசூலித்த பணத்தை திரும்ப கொடுக்கக்கோரி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது," என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக