வியாழன், 17 நவம்பர், 2011

வெளி மாநிலத்தை சேர்ந்த பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற 3 பேர் கைது

 தமிழகம் காம வெறியர்களின் கூடரமாவது ஏன்? காம வறுமை அதிகரித்து விட்டது பண்பாடு கலாசாரம் என்று எவர்கள் அதிகம் கூச்சலிடுகிரார்களோ அவர்கள்தான் முதலில் அவற்றை தொலைப்பவர்கள். இந்த மாதிரி  பண்பாட்டு குஞ்சுகள் அதிகம் இல்லாத நாடுகளில் காம வெறியர்கள் தொகை அதிகம் இல்லை .
மேலூர் : மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழையூரை அடுத்த ரெங்கசாமிபுரம் முன்னக்குடி கண்மாயில் 5 நாட்களுக்கு முன்பு 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் நிர்வாணமாக ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து மேலூர் போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். அந்த பகுதி மக்களிடம் நடத்திய விசாரணையில் கீழையூர் பகுதிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ் தெரியாத பெண் ஒருவர் வந்துள்ளார். தனது பெயர் சுப்ரியா எனக்கூறியுள்ளார். வேறு எதுவும் பேசத்தெரியவில்லை. அதன்பின் அவரை சிலர் விரட்டியதையும் போலீசாரிடம் தெரிவித்தனர்.
சந்தேகத்தின் பேரில் கீழையூரைச் சேர்ந்த பூரி மகன் சுதந்திரராஜன்(21), அதே ஊரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் அபிமன்யூ(19) மற்றும் ஓடைப்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம்(45) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர். சுதந்திரராஜன், அபிமன்யூ ஆகியோர் அந்த பெண்ணை சம்பவத்தன்று மாலையில் விரட்டியுள்ளனர். பொதுமக்கள் கேட்டபோது, பணத்தை திருடியதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து இரவு அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக முன்னக்குடி கண்மாய் பகுதிக்கு இழுத்துச் சென்றனர்.
முதலில் சுதந்திரராஜன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள தனியார் குவாரியைச் சேர்ந்த வாட்ச்மேன் இவர்களை பார்த்துள்ளார். இதனால் வேறு இடத்திற்கு அவளை இழுத்துச் சென்று  அடித்து உதைத்து அபிமன்யூ பலாத்காரம் செய்துள்ளார்.
அப்போது அங்கு வந்த ஆறுமுகம் என்பவரும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். மூன்று பேரும் பலாத்காரம் செய்ததால் அந்த பெண் இறந்து விட்டார். உடலை அங்கேயே போட்டுவிட்டு மூன்று பேரும் தப்பியது விசாரணையில் தெரியவந்தது. மூன்று பேரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக