செவ்வாய், 8 நவம்பர், 2011

புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட 17.34 மெற்றிக்தொன் தங்கம்


புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட 17.34 மெற்றிக்தொன் தங்கம் எங்கே-அனுர குமார திசாநாயக்க!
இலங்கை மத்திய வங்கியில் கையிருப்பில் இருக்கும் தங்கங்களுக்குள் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்கமும் சேர்க்கப்பட்டிருக்கின்றதா என்று ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி. அனுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் மத்திய வங்கியின் இருப்பிலுள்ள தங்கத்தின் அளவு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதியமைச்சர் கீதாஞ்சன குணவர்தன, தற்போது 17.34 மெற்றிக்தொன் தங்கமும் இருப்பதாகக் கூறினார்.
அனுரகுமார எம்.பி. புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட தங்கம் தொடர்பில் கேள்வியெழுப்பிய போதே பிரதியமைச்சர் கீதாஞ்சன குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 2010 ஆம் ஆண்டு ஜீன் மாதம் வரை மத்திய வங்கிக்கு சொந்தமாக 17.34 மெற்றிக்தொன் தங்கம் இருக்கின்றது. 2010 ஆம் ஆண்டு ஜீன் முதல் 2011 ஜீன் வரை 51 மெற்றிக்தொன் தங்கம் கொள்வனவு செய்யப்பட்ட அதேவேளை 52.39 மெற்றிக்தொன் தங்கம் விற்பனை செய்யபட்டது என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக