ஞாயிறு, 20 நவம்பர், 2011

1500 ஆபாச வார்த்தைக்கு பாகிஸ்தானில் தடை

எஸ்எம்எஸ்.சில் அனுப்பும் ஆபாச வார்த்தைகளை தடை செய்ய செல்போன் நிறுவனங்களுக்கு பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.
உலகம் முழுவதும் செல்போன் மூலம் எஸ்எம்எஸ் எனப்படும் குறுந்தகவல்கள் அனுப்பப்படுகின்றன. இதன்மூலம் தீவிரவாதிகள் தகவல் களை ரகசியமாகபரிமாறி கொள்வதும், இளம் பெண்களுக்கு ஆபாச தகவல்கள் அனுப்புவதும் அதிகரித்து வந்தது.
இதையடுத்து ஆபாச வார்த்தைகள், கிண்டல், கேலி, மத துவேசங்கள் இடம்பெறுவதை தடுக்க பாகிஸ்தான் தகவல் தொடர்புத் துறை முடிவெடுத்துள்ளது.
இதற்காக ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் உள்ள 1500 வார்த்தைகளை தடை செய்ய செல்போன் கம்பெனிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதில், இயேசு கிறிஸ்து, முட்டாள் போன்ற வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன.
மதம் தொடர்புள்ள சில வார்த்தைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், பாகிஸ்தானில் மத உரிமையின் நிலை கேள்வி குறியாகி உள்ளது என்று செல்போன் கம்பெனி நிர்வாகிகள் கூறியுள்ளனர். இது குறித்து கருத்து தெரிவிக்க பாகிஸ்தான் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக