திங்கள், 21 நவம்பர், 2011

சூப்பர் ஹீரோவாக-ஜீவா 11கிலோ உடையை 75 நாட்கள்

ஜீவா, தனது அடுத்த படத்தில் புதிய முயற்சியில்இறங்கியுள்ளார்.  இயக்குனர் மிஸ்க்கினுடன் இணைந்து அடுத்ததாக ‘முகமூடி’ என்ற படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தை வருகிற நவம்பர் 30ம் தேதிசென்னையில் பூஜையுடன் தொடங்க திட்டமிட்டிருக்கிறார்கள்.ஜீவா தமிழ் சினிமாவில் முதல்முறையாக சூப்பர்ஹீரோ வேடத்தில் நடிக்கவிருக்கிறார் மற்றும்
இந்த படம் தமிழ் சினிமா வரலாற்றில் முதல் சூப்பர் ஹீரோ படைப்பாகும். . இவருக்கு ஜோடியாக மிஸ் இந்தியா பைனலிஸ்ட் பூஜா ஹெக்டே நடிக்கிறார். படத்தில் பூஜாஹெக்டே பத்திரிக்கையாளராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அஞ்சாதே படத்தில் நடித்த நரேன், வில்லன்கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வில்லன் பெயர் ‘ஜோக்கர்’ என்பதாகும்.படத்தின் சூப்பர் ஹீரோ, சமுதாயத்தில்நடக்கும் ஊழலுக்கு எதிராக போராடுகிறார். கே’ இசையமைக்கிறார். இவர் இந்த படத்திற்க்காகஏற்கனவே இரண்டு பாடல்களை தயார் செய்து விட்டதாக சினிமா வட்டாரம் கூறுகிறது. ஜீவாவும், நரேனும்படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையில் சிறப்பு பயிற்சி பெற்றுவருகின்றனர்.படத்தை பற்றி நடிகர் ஜீவா “சூப்பர் ஹீரோ உடை மிகவும் கனமாக உள்ளது. கிட்டத்தட்ட 11கிலோ எடையுள்ள 
உடையை 75 நாட்கள் சுமக்க வேண்டும். சண்டை காட்சிகள் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் விதத்தில் அமையும் என எதிர்பார்க்கிறேன். படம் சிறப்பாக முடிய வேண்டும் என்று கடுமையாக உழைப்பேன்.” என்றுகூறினார்படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்களை பார்க்கும்போது படம் ஹாலிவுட்டின் ’பேட்மேன்’ போன்றபடமாக இருக்குமோ! என்ற சந்தேகம் எழுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக