திங்கள், 21 நவம்பர், 2011

அதிக கட்டணம் வசூலிப்பதற்காக திடீரென விரைவு பஸ்களாக மாறிய 1,000 'டுபாக்கூர்' பஸ்கள்!

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் இயக்கப்பட்டு வந்த 1,000 சாதாரண பஸ்கள் விரைவு மற்றும் சொகுசு பஸ்களாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில் பால் விலை, பஸ் கட்டண உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களும், பல கட்சியினரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் இயங்கி வந்த 1,000 சாதரண பஸ்கள், விரைவு மற்றும் சொகுசு பஸ்களாக மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக சென்னையில் சாதாரண, எல்.எஸ்.எஸ், எம். சர்வீஸ், பி.பி. விரைவு, சொகுசு, வால்வோ ஏசி என 7 பிரிவுகளில் பஸ்கள் இயக்கப்பட்டன.
தற்போது அவை சாதாரண, விரைவு, சொகுசு, வால்வோ என்று 4 வகைகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. 1,000 சாதாரண கட்டண பஸ்கள் தற்போது குறைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தமிழக அரசு அமலப்படுத்தியுள்ள பஸ் கட்டண உயர்வினால் தினமும் ரூ.25 லட்சம் கூடுதல் வருமானம் கிடைக்கிறது.

தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளன துணைத் தலைவர் சந்திரன் கூறியதாவது,

பஸ் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு பேட்டா குறைக்கப்பட்டுள்ளது. ரூ.1000 வசூலித்தால் ரூ.23.50 பேட்டாவாக வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அதனை ரூ.16.50 குறைக்கப்பட்டுள்ளது. டி.ஏ. மற்றும் பேட்டாவை உயர்த்தி வழங்கக் கோரி வரும் 24ம் தேதி போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக