திங்கள், 31 அக்டோபர், 2011

TNA கனடா வருகை!கனேடிய மக்களிற்கும் அம்பலப்படுத்துங்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கனடா வருகை!-மணியம்

அமெரிக்காவிற்கான பயணத்தினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சனிக்கிழமை மாலை கனடாவிற்கு வருகை தந்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்று கூறிக்கொள்பவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிதி சேகரிப்பில் இன்று மாலை இவர்கள் பங்கு கொள்ளவுள்ளதுடன், அதற்கு முன்னர் கனடா ஸ்ரீ ஜயப்பன் ஆலயத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திலும் பங்கு கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரல்களை ஒழுங்கு செய்தவர்கள் கனேடிய தமிழ்மக்களிற்கு புதியவர்கள் அல்ல. அன்று புலிகளின் தமிழீழ போராட்டத்திற்கு என்று நிதி திரட்டி தமது பொக்கற்றுக்குள் போட்டுக்கொண்டவர்களும், அன்று புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத மற்றும் சிறுவர் துஷ்பிரயோக, மனித உரிமை மீறல்களிற்காக குரல் கொடுத்தவர்களுமே இன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் கனேடிய பிரதிநிதிகளாக காண்பித்து கொள்பவர்கள். கனடா உதயன் பத்திரிகை லோகேந்திரலிங்கம், வீடு விற்பனை முகவர்களுடன் புலிகளுக்கான நிதி வசூலிப்பில் ஈடுபட்டவர்களே தமிழ் தேசிய கூட்டமைப்பின் கனேடிய பிரதிநிதிகள் ஆவர்.
புலிகளை கனேடிய அரசு பயங்கரவாதிகளாக முத்திரை குத்தி அவர்களை தடை செய்துள்ள நிலையில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று கூறி நிதி சேகரிப்பு மேற்கொள்ளும் கொள்ளையர்கள் ஆவர்.
இதனை புரிந்து இன்று மாலை ஜயப்பன் ஆலயத்தில் இடம்பெறும் பொது கூட்டத்தில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும், கனேடிய தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்று கூறிக்கொள்ளும் கொள்ளையர்களிடமும் உங்களது வினாக்களை எழுப்பி இந்த கொள்ளை கூட்டத்தினை எதிர்கால தமிழ் சமுதாயத்திற்கும் கனேடிய மக்களிற்கும் அம்பலப்படுத்துங்கள்.
நன்றி: நாசம்நெற்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக