செவ்வாய், 25 அக்டோபர், 2011

தீவிர புலி ஆதரவாளர்களே ஜனாதிபதி மீது வழக்குத் தொடர்கின்றனர் - பந்துல

மிகக் கொடூரமான புலிப் பயங்கரவாதிகளிடமிருந்து இலங்கையை மீட்டெடுத்த ஒரே தலைவரான ஜனாதிபதி மீதே தீவிர புலி ஆதரவாளர்கள் போர் குற்ற வழக்குத் தாக்கல் செய்வதாக ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் அவுஸ்திரேலியா சென்றுள்ள பந்துல ஜயசேகர அங்கிருந்து இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் பிறந்த அருணாச்சலம் ஜெகதீஸ்வரன் என்ற நபர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு எதிராக மெல்பேர்ன் நீதிமன்றில் போர்குற்ற வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
பொது நலவாய நாட்டுத் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் பேர்த் சென்றுள்ள நிலையில் இவ்வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு எதிர்வரும் 29ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக